ரஜினிக்கு தங்கையாக 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க உள்ள 'லால் சலாம்' படத்தில் பிரபல நடிகரின் மனைவி, 25 ஆண்டுகளுக்குப் பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க உள்ள 'லால் சலாம்' படத்தில் பிரபல நடிகரின் மனைவி, 25 ஆண்டுகளுக்குப் பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கினார். தெலுங்கில் இவர் நடித்த போது பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர் சேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடைசியாக தமிழில் 'வளைகாப்பு' என்கிற படத்தில் 1988 ஆம் ஆண்டு நடித்த ஜீவிதா பின்னர் தெலுங்கில் மட்டுமே ஒரு சில படங்களில் நடித்தார்.
அந்த வகையில் தெலுங்கில் கடைசியாக 1990 ஆம் ஆண்டுவெளியான 'மாகாடு' என்கிற படத்தில் தான் நடித்திருந்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய ஜீவிதா, திரையுலகில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய கணவரை வைத்து 'சேஷு' என்கிற படத்தை இயக்கினார். இது இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழில் வெளியான 'சேது' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
மேலும் சத்தியமே ஜெயதே, மகான்களை, சேகர் போன்ற திரைப்படங்களை இயக்கியதோடு சில படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் நடிகை ஜீவிதா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' படத்தில் 25 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் நடிகையாக ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!
இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக இவர் நடிக்க உள்ளதாகவும், இவருடைய கதாபாத்திரம்தான் படத்தின் திருப்புமுனைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 7ஆம் தேதி துவங்க உள்ள முதல் பட்ட படப்பிடிப்பிலேயே ரஜினிகாந்த் மற்றும் ஜீவிதா ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.