பெண்ணா... இல்லை தேவதையா? பளபளக்கும் உடையில் ஒரு தினுசாக போஸ் கொடுத்து... இளசுகளை இம்சிக்கும் பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே... செம்ம ஸ்டைலிஷாக பளபளக்கும் உடையில், ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு ஹாட்டாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை பூஜா ஹெட்டே நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'ஆல வைகுண்டபுறமுலு' திரைப்படம் தான் கடைசியாக வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராதே ஷியாம், ஆச்சார்யா, பீஸ்ட், சர்க்கஸ், போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், ஒரு வெற்றிப்படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.
தற்போது இவரின் கைவசம் தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் தலா ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. மேலும் தமிழில் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் தொடர்ந்து தமிழில் தோல்வி படங்களை கொடுத்து வருவதால், இந்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தையும் குறைத்து கொண்டுள்ளாராம் பூஜா.
'பொன்னியின் செல்வன் 2' புரோமோஷனை துவங்கிய லைகா..! வெளியானது புதிய வீடியோ..!
பட வாய்ப்புகளை கைப்பற்றி, வெற்றிப்படத்தை கொடுக்க முனைப்பு காட்டி வரும் பூஜா... தற்போது, ஜொலிக்கும் உடையில், அழகும் கவர்ச்சியும் பொங்கும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.