தாஜ்மஹால் முன்பு காதல் மழை பொழிந்த... ஜெயம் ரவி - ஆர்த்தி..! சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் பண்ணும் ரியல் ஜோடி!
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இருவரும், தாஜ்மஹால் முன்பு இளம் காதல் ஜோடிகளை போல், ரொமான்ஸ் பண்ணும் காதல் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, திரைப்படங்கள் நடிப்பதில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தன்னுடைய மனைவிக்காகவும், மகன்களுக்காகவும் நேரம் ஒதுக்க மறவாதவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள, 'அகிலன்' திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த மாதம் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது.
ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்தது, இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நேர்த்தியாக தன்னுடைய நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.
Breaking: நாளை வெளியாகிறதா AK 62 பட அறிவிப்பு? லைகா வெளியிட்ட தகவலால் குஷியான ரசிகர்கள்!
ஜெயம் ரவி எந்த அளவிற்கு மிகவும் பிரபலமோ... அதே அளவிற்கு அவரின் மனைவி ஆர்த்தியும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இருக்கும் மனைவி ஆர்த்தியுடன், ஜெயம் ரவி தாஜ்மஹால் முன்பு காதல் மழை பொழியும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!
மனைவி ஆர்த்தியை கட்டி பிடித்து, சினிமாவில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் பண்ணுவதை மிஞ்சும் அளவிற்கு இந்த ரியல் ஜோடி, ரொமான்டிக்காக போஸ் கொடுத்துள்ளார்.
ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பை தாடியில், எளிமையான சல்வாரில் இருக்கும் மனைவியை கட்டி பிடித்து செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.