முன்னழகையும்... பின்னழகையும் மிடுக்காக காட்டும் கிக்கான அவுட் ஃபிட்டில்..! ரசிகர்களை மிரள வைத்த சமந்தா! போட்டோ
நடிகை சமந்தா, சிட்டாடல் தொடரின் புரோமோஷனில் பாம்பு நெக் பீஸ் மற்றும் மிகவும் ஸ்டைலிஷான அவுட் ஃபிட்டில் கலந்து கொண்டு ஹாலிவுட் நடிகைகளையே மிரள வைத்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும், நடிகை சமந்தா... ஏற்கனவே தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்த நிலையில், இதை தொடர்ந்து ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல், இந்திய உருவாக்கத்தில் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடலின், ப்ரியங்கா சோப்ரா நடித்த ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சமந்தாவின் காட்சிகள் இடம்பெற வில்லை என்றாலும், ப்ரியங்கா சோப்ரா, ஆக்ஷனின் அதிரடி காட்டிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள் , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை ஒளிபரப்பாக உள்ள, இந்த தொடரை பிரபல ஹாலிவுட் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
நயன்தாரா தான் வேணும்..! பக்கா பிளான் போட்ட இயக்குனர்... கமலுக்கு ஜோடியாகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?
இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே, ஹோலிவுட்டிலும், சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்திய பதிப்பிலும் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிட்டாடல் இணைய தொடர் வெளியாகிறது.
மாறுபட்ட புலனாய்வு தொடராக உருவாகி இருக்கும், சிட்டாடல் தொடர்... ஸ்ட்ரீமிங் செய்ய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதன் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், டைட்டான உடையில்... பாம்பு நெக் பீஸ் மற்றும் பாம்பு பிரேஸ்லெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.