ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிம்பு! விஜய் பாணியில் பிரியாணி விருந்து வைத்து அமர்க்களம்... போட்டோஸ்
நடிகர் சிம்பு இன்று தன்னுடைய வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடியது மட்டும் இன்றி, அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன் முக கலைஞராக இருக்கும்... டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிலம்பரசன்.
பள்ளி வாசலை மிதிப்பதற்கு முன்பே... திரையுலக வாசலை மிதித்து விட்டார் சிம்பு. தன்னுடைய ஒரு வயதிலேயே தந்தை டி.ஆர். இயக்கி, நடித்த 'உறவை காத்த கிளி 'படத்தில் குழந்தையாக நடித்திருந்தார்.
மாடல்களை வைத்து விபச்சாரம்... 27 வயது மாதவன் பட நடிகை அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு..
இதை தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக. மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், என சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
பின்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த சிம்பு... இடையில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அப் அண்ட் டவுன்சை சந்தித்தாலும், ரசிகர்கள் மனத்தில் இன்று வரை சிம்மாசனம்மிட்டு அமர்ந்துள்ளார்.
அப்பா 8 அடி பாய்ந்தால்... பிள்ளை 18 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தனது தந்தையைப் போல் பல திறமைகளை கொண்டவாராக திரையுலகில் அசத்தி வருகிறார் சிம்பு.
சிம்பு தன்னுடைய ஆக்ட்டிங் கேரியரை துவங்கிய போது... அடுத்தடுத்த நடித்த தம், கோவில், அலை, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
மேலும் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத வகையில், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு, வெந்துதணிந்தது காடு போன்ற படங்களிலும் நடித்தார்.
கடைசியாக சிம்பு நடிப்பில், இம்மாதம் வெளியான பத்து தல திரைப்படத்தில், இத்தனை வருடங்களில்... இதுவரை பார்த்திடாத சிம்புவை பார்க்க வைத்தது. மேலும் தனித்துவமான கெத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிம்பு, இதை தொடர்ந்து நடித்த வெந்து தணிந்தது காடு, மற்றும் பத்து தல ஆகிய படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தது.
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் தளபதி விஜய் ஸ்டைலில் ரசிகர்க மன்ற நிர்வாகிகளுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
திரிஷா திருமண சர்ச்சை.. சூர்யாவுடன் கல்யாணமா? முதல் முறையாக வாய் திறந்த திரிஷாவின் அம்மா!
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் தளபதி விஜய் ஸ்டைலில் ரசிகர்க மன்ற நிர்வாகிகளுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். சிம்பு ரசிகர் மன்றமாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும். ரசிகர்களுக்கு தன்னுடைய கைகளாலேயே பிரியாணி விருந்து வைத்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவில்... இனி ஒரு போதும் ரசிகர்களை தலை குனிய விடமாட்டேன். என மிகவும் எமோஷ்னலாக பேசிய சிம்பு... அடுத்தடுத்து யாரும் எதிர்பாராத வகையில் இப்படி பல விஷயங்களை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.