Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?
நடிகை திரிஷாவை தொடர்ந்து, ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக், பறிக்கப்பட்ட சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அருண் மொழிவர்மன் என பெயர் மாற்றம் செய்ததால் அவருடைய ப்ளூ டிக் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி முதல் முறையாக இணைந்து நடித்திருந்த, இப்படம்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
கவர்ச்சி காத்து பலமா வீசுதே.! சேலையை சரியா விட்டு... மிடுக்காக முன்னழகை காட்டும் பிரியங்கா மோகன்!
தென்னகத்தை ஆண்ட சோழர்களின் வீரம், கொடை, போர், போன்ற பல தகவல்களை... வரலாற்று சுவடுகளில் இருந்து சேகரித்து, புனையப்பட்ட கதையாக 'பொன்னியின் செல்வன்' கதையை எழுதி இருந்தார் கல்கி.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இப்படத்தை எம்ஜிஆர், கமலஹாசன், உள்ளிட்ட சிலர் எடுக்க முனைப்பு காட்டிய போதிலும், பட்ஜெட் மற்றும் ஒரு சில காரணங்களால் இதனை படமாக்க முடியவில்லை. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தை, தன்னுடைய கனவு படமாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்தினம். இந்த படத்தில், ராஜராஜ சோழன் 'அருண்மொழி வர்மன்' கதாபாத்திரத்தில், ஜெயம் ரவி நடித்துள்ளார்.
மேலும் த்ரிஷா குந்தவையாகவும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அதே போல் சரத்குமாரும், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான் ஜெயசித்ரா, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில்.. இம்மாதம் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. எனவே இப்படத்திற்கான புரமோஷன் பணியில் கவனம் செலுத்தி வருகிறது பட குழு.
நேற்று முன்தினம் கூட இந்த படத்தில் இருந்து பொன்னியின் செல்வன் ஆன்தம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து அசத்தினர்.
இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக நடிகை திரிஷா, ட்விட்டரில் தன்னுடைய பெயரை குந்தவை என மாற்றியதால் அவருடைய ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியும், தன்னுடைய பெயரை அருண்மொழி வர்மன் என மாற்றினார். எவ்வித ஆவணத்திலும் இல்லாத ஒரு பெயரை மாற்றியதால் அவருடைய அதிகாரப்பூர்வ கணக்கு என ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்த ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.