MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரிஷா திருமண சர்ச்சை.. சூர்யாவுடன் கல்யாணமா? முதல் முறையாக வாய் திறந்த திரிஷாவின் அம்மா!

திரிஷா திருமண சர்ச்சை.. சூர்யாவுடன் கல்யாணமா? முதல் முறையாக வாய் திறந்த திரிஷாவின் அம்மா!

ஏ.எல்.சூர்யா என்பவர், தொடர்ந்து தனக்கும் த்ரிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சில மாதங்களாகவே ஊடக பேட்டிகளில்  தொண்டை கிழிய பேசி வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் த்ரிஷாவின் அம்மா உமா. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 17 2023, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் - தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் திரிஷா. இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், விடாப்பிடியாக நடித்து,  40 வயதிலும் தனக்கான மார்க்கெட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார்.
 

26

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, குந்தவை திரிஷாவின் சினிமா கேரியர் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வெளியான 'கில்லி' திரைப்படத்தை தொடர்ந்து 14 வருடங்களுக்குப் பின், மீண்டும் விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் இணைந்துள்ளார். மல்டி ஸ்டார்ஸ் நடிப்பில், கேங் ஸ்டார் படமாக உருவாகி வரும் இந்த படம், ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படம் என்பதால், எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக மாறியுள்ளது.

திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!

36

நடிகை திரிஷா 40 வயதை எட்டிவிட்ட போதிலும் இளம் ஹீரோயின் லுக்கில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார். மேலும் இவர் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் இம்மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தான் படக்குழுவினர் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
 

46

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே, திரிஷாவும் நானும் காதலிக்கிறோம் என்றும், எங்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது என காட்டு கத்தாக கத்தி ... கூப்பாடு போட்டு வருகிறார் ஏ.எல்.சூர்யா என்பவர். இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்திலும், திரிஷா ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரிஷாவின் தரப்பில் இருந்து இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை.

விஜய் வீட்டு வாசலில் விழுந்து கும்பிட்டு.. அழுது அலப்பறை செய்த பள்ளி மாணவி! தளபதி ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

56

மேலும் நாளுக்கு நாள் இவரின் அட்ராசிட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட திரிஷா மீது நான் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி போனில் தான்  பேசிக் கொள்வோம். தற்போது இருவருக்குள்ளும் ஒரு சின்ன சண்டை என்பதால் பேசிக்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார். இவரின் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தாலும், சிலர் இது ஒரு வேலை உண்மையாக இருக்குமோ? என்றும் கமெண்ட் போட்டு வந்ததை பார்க்க முடிந்தது.

66

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து அமைதி காத்து வந்த திரிஷாவின் தாயார், முதல் முறையாக அந்த வாய் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அந்த நபர் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும். உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வீணாக இந்த பிரச்சனைக்குள் நாம் தலையிட்டால் அது பரபரப்பாக பேசப்படும் எனக் கூறியுள்ளாராம்.  இதனை பிரபல பத்திரிகையாளர் அந்தகன் என்பவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஒருவர் அப்பா ஜாடை.. இன்னொருவர் அம்மா ஜாடை! வைரலாகும் போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved