MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!

திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷிடம், ரசிகர் ஒருவர் அவருடைய திருமணம் குறித்து கேள்வி எழுப்ப... புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கூலாக தன்னுடைய பதிலை கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 17 2023, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில், வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் அறிமுகமானவர். காரணம், இவருடைய தாய் மேனகா, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பின்னர் மேனகா, பிரபல மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய மேனகா, பல வருடங்கள் கழித்து... சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். இவரை தொடர்ந்து இவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

விஜய் வீட்டு வாசலில் விழுந்து கும்பிட்டு.. அழுது அலப்பறை செய்த பள்ளி மாணவி! தளபதி ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

36

கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமான 'இது என்ன மாயம்' திரைப்படம், படுதோல்வியை சந்தித்த போதிலும், இரண்டாவதாக வெளியான, ரஜினி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி ஸ்கொயர், தானா சேர்ந்த கூட்டம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

46

கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால், அது பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடி  திரைப்படம் தான். இப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்தது... மட்டுமன்றி, கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

பிரபு தேவாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஒருவர் அப்பா ஜாடை.. இன்னொருவர் அம்மா ஜாடை! வைரலாகும் போட்டோஸ்!

56

இப்படத்திற்கு பின்னர், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், தற்போது இவர் கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

66

மேலும் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, மாமன்னன், போன்ற பல படங்கள் இவரின் கைவசம் உள்ளன முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது, கீர்த்தியின் திருமண பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இது நேரடியாகவே ஒரு ரசிகர் instagram பக்கத்தில் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கீர்த்தி சுரேஷ், வடிவேலு தன்னுடைய இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு ஒண்ணுமே இல்லை என்று காட்டுவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, தற்போதைக்கு திருமண பேச்சுக்கு இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வடிவேலு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved