- Home
- Cinema
- கஷ்டமா தான் இருக்கு.. ஆனா! விவாகரத்து குறித்தும், அடுத்த காதல் பற்றியும் முதன்முறையாக மனம்திறந்து பேசிய சமந்தா
கஷ்டமா தான் இருக்கு.. ஆனா! விவாகரத்து குறித்தும், அடுத்த காதல் பற்றியும் முதன்முறையாக மனம்திறந்து பேசிய சமந்தா
Samantha : கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய காஃபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை சமந்தா, விவாகரத்து குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார். அதேபோல் நாக சைதன்யாவும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடிக்கு இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிரந்தரமாக பிரிய உள்ளதாக அறிவித்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களது பிரிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்... ஷேம் ஷேம்... பப்பி ஷேம்... கையில் சிகரெட் உடன் நிர்வாணமாக போட்டோ போட்ட கிரண் - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு பேட்டியிலும் தெரிவிக்காத அவர், சமீபத்தில் காஃபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது : “திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழல் ஏற்படும்போது பிரிவதை தவிர வேறு வழியில்லை. அது கடினமான முடிவு, கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் எங்களுக்கு அது தான் சரியான தீர்வாக அமைந்தது என கரண் ஜோகர் கேட்ட கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பதில் அளித்தார் சமந்தா.
அதேபோல் மீண்டும் உங்களுக்கு காதல் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மீண்டும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை தான் எனக்கு வசதியானதாக உள்ளது” என பதிலளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆசை வார்த்தை கூறி 6 ஹீரோயின்களை ஏமாற்றிய பிரபுதேவா... இது என்ன புது கதையா இருக்கு?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.