ஆசை வார்த்தை கூறி 6 ஹீரோயின்களை ஏமாற்றிய பிரபுதேவா... இது என்ன புது கதையா இருக்கு?
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் பிரபுதேவா, தற்போது நடித்து முடித்துள்ள பஹீரா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் பஹீரா, ரேக்ளா, பொய்க்கால் குதிரை உள்பட ஏராளமான படங்கள் உள்ளன. இவர் நடித்துள்ள மை டியர் பூதம் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் நடித்துள்ள பஹீரா படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரிலீஸாக இருந்த விக்ரமின் கோப்ரா திரைப்படம் தள்ளிப்போனதால், தற்போது பஹீரா படக்குழு அந்த ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.
இதையும் படியுங்கள்... Ranveer singh : ஆடையின்றி நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரன்வீர் சிங்
பஹீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடித்த திரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். அவர் இயக்கியுள்ள மூன்றாவது படம் தான் பஹீரா. சைக்கோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அவர்களை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புது விதமான கதையாக இருக்கும் என கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... முதல்முறையாக தேசிய விருதை தட்டித்தூக்குவாரா சூர்யா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் - இன்று வெளியாகிறது அறிவிப்பு