- Home
- Cinema
- Ranveer singh : ஆடையின்றி நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரன்வீர் சிங்
Ranveer singh : ஆடையின்றி நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரன்வீர் சிங்
Ranveer singh : பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவி கணவருமான ரன்வீர் சிங், நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 83 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரன்வீர் சிங்.
கபில் தேவ் போன்றே தோற்றத்தையும் மாற்றி சிறப்பாக நடித்திருந்த ரன்வீர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், இயக்குனர் ஷங்கர் உடனும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார். அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இதற்கான ஷூட்டிங்கும் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... முதல்முறையாக தேசிய விருதை தட்டித்தூக்குவாரா சூர்யா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் - இன்று வெளியாகிறது அறிவிப்பு
நடிகர் ரன்வீர் சிங், நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருபவர் ஆவார். வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இவர் நடத்தி உள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
ஏனெனில், அவர் தற்போது மேகசின் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளாராம். பெர்ண்ட் ரெனால்ட்ஸும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவரைப் போன்றே தற்போது ரன்வீரும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவரின் இந்த போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் ஆபரேஷன் சக்சஸ்... சென்னை திரும்பியதும் சிம்புவின் திருமணம் குறித்து TR சொன்ன குட் நியூஸ்