Nikki Galrani Pregnant: கர்ப்பமாக இருக்கிறேனா..? உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி..!
சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், இந்த வதந்திக்கு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'மிருகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். விமர்சனம் ரீதியாக இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்தது. இதை தொடர்ந்து, ஈரம், ஆரவான், கோச்சடையான், என ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பால், தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதே போல், ஹீரோவாக மட்டுமே நடிக்காமல்... வில்லன் சப்ஜெட் கதைகளையும் தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அண்மையில் கூட இவர், இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' படத்தில், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஆதி, சமீபத்தில் தான் திருமண பந்தத்தில் இணைந்தார்.
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்த போது... இந்த படத்தின் நாயகி, நிக்கி கல்ராணியை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து விலகிய நிக்கி கல்ராணி குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே... நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது நிக்கி கல்ராணி... தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் பெரிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 81 ஆவது படம்! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!