யாராவது என்னை கிள்ளுங்கள்! இது கனவு இல்லையே? பொன்னியின் செல்வன் ஒட்டு மொத்த வசூலை பார்த்து பிரமித்த விக்ரம்!

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகும் நிலையில், இந்த படத்தின் வசூல் சாதனை குறித்து, லைகா வெளியிட்ட தகவலை கண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கி தன்னை யாராவது கிள்ளுங்கள் என மலைப்புடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 

Somebody pls pinch me ponniyin selvan actor vikram shocking tweet

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தை, லைகா நிறுவனம் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரவிவர்மன் ஒளிப்பதிவு இந்த படத்தின் கூடுதல் பலம் என கூறலாம்.

அப்பா - அம்மா 50 வது திருமண நாளை... திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி! வைரலாகும் புகைப்படம்.

Somebody pls pinch me ponniyin selvan actor vikram shocking tweet

பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய பிளஸ்சாக பார்க்கப்பட்டது என்றால், அது இப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான்.  அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம் நடித்திருந்தார். மேலும் அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், ஆழ்வார்கடியானாக  ஜெயராமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

பர்த்டே பிளானை டோட்டலாக மாற்றிய நயன்! இத்தனை வருட பழக்கத்தை குழந்தைகளுக்காக கை விட்ட லேடி சூப்பர் ஸ்டார்!

Somebody pls pinch me ponniyin selvan actor vikram shocking tweet

காதல் மன்னனாக சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரை கதறி அழ வைத்த ரக்ஷிதா.! என்ன நடந்தது.? வீடியோ...

இந்நிலையில் இந்த படம் வெளியாகி, இன்றோடு 50 நாளை எட்டியுள்ளது. மேலும் இப்படம் 500 கோடியை எட்டுமா என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆவலாக காத்திருந்த நிலையில், இன்று இந்த படத்தின் ஒட்டு மொத்த வசூல் குறித்த தகவலையும் லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த தகவலை பார்த்து மலைத்து போன நடிகர் விக்ரம், சமூக வலைத்தளத்தில் ஆச்சர்யத்துடன் தன்னை யாராவது கிள்ளும்படியும் இது கனவில்லையே என கேட்டுள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் சுவாரஸ்யம் மற்றும் திருப்புமுனைகளை கொண்டது என்பதால்... 500 கோடிக்கு மேல் இரண்டாவது பாகம் வசூல் செய்யுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios