காதல் மன்னனாக சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரை கதறி அழ வைத்த ரக்ஷிதா.! என்ன நடந்தது.? வீடியோ...

தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில், ராஜா ராணி டாஸ்கில் காதல் மன்னனாக சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி அழுதுள்ளார்.
 

Why is Robert Master crying? biggboss latest promo released

மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் 40 நாட்கள் ஆகிறது. எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும், அதனை சண்டை போடாமல் விளையாட கூடாது என, போட்டி போட்டுகொண்டு ஒவ்வொரு போட்டியாளரும் சண்டை போட்டு வருவதை பார்க்க முடிகிறது. தற்போது நடந்து வரும் அரண்மனை டாஸ்க் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமாக... கலகலப்பாக துவங்கினாலும், தற்போது பிரச்சனையில் தான் சென்று கொண்டிருக்கிறது. முதல் புரோமோவில் கூட அசீமை போடா, உன்னுடன் பேசுவதை கூட அசிங்கமாக நினைக்கிறன் என ADK தன்னுடைய கோபத்தை கொட்டி தீர்த்தார்.

Why is Robert Master crying? biggboss latest promo released

வாவ்... கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமண பத்திரிக்கையில் இப்படி ஒரு ஸ்பெஷலா? குவியும் பாராட்டு!

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசும் காட்சி காட்டப்படுகிறது. ராஜவம்சமும், அருங்காட்சியாகமும் டாஸ்கில் யாருக்கும் தெரியாத சில உண்மைகள் உள்ளதாக தெரிவித்து , ராணி மற்றும் படை தளபதிக்கு கொடுத்த டாஸ்க் குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு தெரிவிக்கிறார் பிக்பாஸ்.

Why is Robert Master crying? biggboss latest promo released

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!

பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை, கண் கலங்கியபடி, ராபர்ட் மாஸ்டர் வெளியே வர... ரக்ஷிதா மிகவும் கடுப்பாக அமர்ந்திருக்கும் காட்சிகளும் காட்டப்படுகிறது. ராபர்ட் மாஸ்டரை ADK எதோ சொல்லி தேற்றுகிறார்.  ஏற்கனவே ரக்ஷிதா விலகி விலகி போன போதும், அவரை தொந்தரவு செய்து வந்த ராபர்ட் மாஸ்டர், ராஜா - ராணி டாஸ்கில்... ரக்ஷிதாவுக்கு அம்பு விட சொல்லி கொடுப்பதும், அவருடன் டான்ஸ் ஆடுவது என சற்று எல்லை மீறியதாகவே பார்க்கப்பட்டது. தனக்குள் இருக்கும் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கி கொண்டிருந்த அவர் இன்று எரிமலை போல் வெடித்ததன் காரணமாக தான், ராபர்ட் மாஸ்டர் தற்போது கண்ணில் கண்ணீரோடு... வெளியே வந்து பீல் செய்து கொண்டிருக்கிறாரே என நினைக்க வைத்துள்ளது இந்த புரோமோ.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios