பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றுகொண்டிருக்கும் நிலையில்... இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அதில் வைக்கப்படும் டாஸ்க்கிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டாலும், எப்போதும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது வாரம் தோறும் மக்கள் ஓட்டுகளில் அடிப்படையில் அரங்கேறும் எலிமினேஷன் தான்.
21 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நிலையில், இதுவரை ஜிபி.முத்து, டான்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல் கோளார், செரீனா, மகேஷ்வரி ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் 6 ஆவது போட்டியாளராக யார் வெளியேறுவார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கடந்த வாரம் வெளியே வந்த மகேஷ்வரி கணிப்பு..!
இந்த வாரம் அசீம், தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா, நிவாஸினி, ஆகிய ஏழு நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் நிவா தான் குறைவான வாக்குகளுடன் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் முதல் மூன்று நாட்கள் கொஞ்சம் அடங்கி இருந்த அசீம், நேற்று தான் கொஞ்சம் ஓவராக வாயை விட்டு சிக்கினார். எனினும் இவருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்து சேவ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இவரது தொடர்ந்து, தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் சேவ் அவர்கள் என நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.
இந்திய சினிமாவை மிரளவைத்த 'காந்தாரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்!
மிகவும் குறைவான வாக்குகளுடன் ஆயிஷா மற்றும் நிவா ஆகியோர் தான் கடைசி இரண்டு இடங்களில் உள்ளதாகவும், ஆயிஷா இந்த வாரம் கொஞ்சம் எனர்ஜிட்டிக்காக விளையாடினாலும், நிவா அசல் கோளார் வெளியேறியதில் இருந்து விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் உள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட, மீண்டும் அசல் கோளாறை உள்ளே அனுப்புங்கள் நான் அவரிடம் பேசவே மாட்டேன் என கூறி டீல் போட்டார். சுவாரஸ்யம் இல்லாமல் நிகழ்ச்சியில் விளையாடி வரும் இவர் தான், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை நெட்டிசன்கள் கணிப்பு பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?