பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கடந்த வாரம் வெளியே வந்த மகேஷ்வரி கணிப்பு..!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்... இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஷ்வரி.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது, சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளதால், 16 போட்டியாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடி வருகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பொறுத்தவரை... கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக, போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் சண்டை போட்டு கொள்கிறார்கள். இதன் காரணமாக நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் குறைந்து, வெறுப்பு தட்டுகிறது என பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவை மிரளவைத்த 'காந்தாரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்!
கடந்த 2 வாரங்களாக அளவுக்கு அதிகமாக பிக்பாஸ் வீட்டில் சண்டை நடந்த நிலையில், ராஜா ராணி டாஸ்கில்... ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவிடம் கொஞ்சம் ஓவராகவே வழிவது சில விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. எனினும் எந்நேரமும் சண்டை போட்டுக்கொள்ளும் போட்டியாளர்களுக்கு மத்தியில் ராபர்ட் மாஸ்டர் செய்யும் குறும்புத்தனங்கள் என்டர்டைன்மெண்ட்டாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய... போட்டியாளரான மகேஷ்வரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், ஊடகங்களுக்கு சில போட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில், இவர் கொடுத்த பேட்டியில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் வெற்றிபெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார்.
Ajith Statement: நடிகர் அஜித்தின் திடீர் அறிக்கை..! பின்னணி இதுவா..? வெளியான தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்களில் விக்ரமனும் ஒருவர். அவர் தான் கண்டிப்பாக இறுதி போட்டி வரை வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அசீம் மற்றும் தனலட்சுமி ஆகியோரிடம் இல்லாத நிதானம் விக்ரமனிடம் உள்ளது அவரிடம் உள்ள மிகப்பெரிய பலம் என தெரிவித்துள்ளார்.
விக்ரமனை போலவே ஷிவின், மணிகண்டன், அசீம், ரக்ஷிதா போன்ற சில பிரபலங்களும் சில விமர்சனங்களுக்கு மத்தியில் நன்கு விளையாடி வருவதால் 100 நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?