வாவ்... கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமண பத்திரிக்கையில் இப்படி ஒரு ஸ்பெஷலா? குவியும் பாராட்டு!
நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும், இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இவர்களுடைய திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என பெயரெடுத்த கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் கடந்த சில வருடங்களாக நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும், தற்போது பெற்றோர் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். எனவே இவர்களுடைய திருமணம், இந்த மாதம் (நவம்பர் 28ஆம் தேதி) நடைபெற உள்ளது.
இவர்களின் திருமண ஏற்பாடுகள் தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய நபர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை தொடர்ந்து நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலகை சேர்ந்த நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் தங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார்கள். அதே போல் அவர்களுடைய குடும்பத்தினரும் நெருக்கமானவர்களுக்கு அழைப்புதல்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்தியின் திருமண பத்திரிக்கையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாதாரண பத்திரிக்கை போல் இல்லாமல், இதில் சற்று வித்தியாசத்தையும் காட்டி அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது இந்த ஜோடி. அதாவது இந்த பத்திரிக்கை கையால் நெசவு செய்யப்பட்ட துணியால் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில்... ஹாண்ட் லூம்மில் தயார் செய்துள்ளனர். இந்த தகவல் வெளியே வர பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!