அப்பா - அம்மா 50 வது திருமண நாளை... திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி! வைரலாகும் புகைப்படம்.
நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோரான மோகன் மற்றும் வரலஷ்மி தம்பதி நேற்று தங்களின் 50-ஆவது திருமண நாளை கொண்டாடிய நிலையில், திருத்தணி கோவிலில் இவர்கள் சாமி தரிசனம் செய்த, புகைப்படங்கள் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கும், ஜெயம் ரவி மற்றும் திறமையான இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜா ஆகியோரை திரையுலகிற்கு வழங்கிய பெருமை அவரது பெற்றோரான எடிட்டர் மோகன் மற்றும் வரலட்சுமி மோகன் ஆகியோரையே சேரும்.
இருவருமே திரையுலகில் முன்னணி இடத்தை எட்டி விட்ட போதும், தாய் - தந்தைக்கு அன்பான மகன்களாகவே உள்ளனர். வீட்டில் எந்த ஒரு விஷேஷம் என்றாலும், மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் ஆஜராகி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
காதல் மன்னனாக சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரை கதறி அழ வைத்த ரக்ஷிதா.! என்ன நடந்தது.? வீடியோ...
இந்நிலையில் ஜெயம் ரவியின் பெற்றோர் எடிட்டர் மோகன் மற்றும் வரலக்ஷ்மி தம்பதி நேற்று தங்களின் 50-ஆவது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதனால் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை நடிகர் ஜெயம் ரவி ,மற்றும் மோகன் ராஜா இருவருமே... பெற்றோருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு, தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவியின் தந்தை இந்திய மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!