பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகை மீனா, தன்னுடைய தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ள, புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய கியூட் அழகால் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் கதாநாயகியாகவும் மாறியவர். 80 மற்றும் 90களில்... முன்னணி நடிகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் அவருக்கே பல படங்களில் ஜோடியாக நடித்ததால், அப்போதே சில விமர்சனங்கள் எழுந்த போதும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த, எஜமான், வீரா, முத்து, போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகள்: வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?
தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இவரை தொடர்ந்து இவரது மகளும், விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்தார்.
மேலும் செய்திகள்: திடீரென மாலத்தீவுக்கு விசிட் அடித்து... நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போட்டோஷூட் நடத்திய அமலா பால்
கணவர், குழந்தை என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த மீனா வாழ்க்கையில் மிக பெரிய இடியாய் இறங்கியது, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மீனாவின் கணவர் இறப்பு.
நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர், தொடர்ந்து அதற்கான சிகிச்சை பெற்றுவந்த போதும்... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருவேளை தன்னுடைய கணவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்திருந்தால், அவர் நலமுடன் இருந்திருப்பார் என கூறி, மிகவும் உருக்கமான இவர் பேசியது ரசிகர்களையே கலங்க வைத்தது.
மேலும் செய்திகள்: அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
முழுமையாக கணவரின் நினைப்பில் இருந்து மீனா வெளியே வரவில்லை என்றாலும், குடும்பத்தின் அக்கறை... தோழிகளின் அரவணைப்பால் அதில் இருந்து மீண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட வீட்டின் உள்ளேயே இருந்த மீனாவை, நடிகை ரம்யா, பீச் போன்ற வெளியிடங்களுக்கு கூட்டி சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகள்: கட்டுக்கடங்காத கவர்ச்சி... பிகினி உடையில் சிக்கென இருக்கும் உடலை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சித்தி இத்னானி..!
இதை தொடர்ந்து நடிகை மீனா தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இவர் தன்னுடைய தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் நடிகை சினேகாவின் சகோதரி, பிரசன்னாவின் சகோதரி, ப்ரீத்தா ஹரி, வந்தனா ஸ்ரீகாந்த் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் மீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.