அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அந்த சீரியலின் ரசிகர்களை செம்ம அப்செட் ஆகியுள்ளது.
சமீப காலமாக சீரியல்கள் பெறுவார்கள் முதல்... சிறியவர்கள் வரை... அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனவே தான் இந்த விஜய் டிவி சீரியலில் நடிக்கும் பலருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் மிக எளிதாகவே கிடைத்து விடுகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரபல ஸ்டண்ட் அப் காமெடியன் நவீன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாவம் கணேசன்' தன்னுடைய குடும்பத்திற்காக ஒருவன், தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து... அவர்களை எப்படி சந்தோஷமாக பார்த்து கொள்கிறான் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
மேலும் செய்திகள்: Biggboss Tamil 6: பட வாய்ப்பு குறைந்ததால்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்குகிறாரா அமலா பால்?
இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக, சீரியல் நடிகை நேகா கௌடா நடித்து வந்தார். ஒருவழியாக தற்போது தன்னுடைய காதலியை கரம் பிடித்து, இரு குடும்பத்திற்கும் உள்ள பிரச்சனைகளையும் சுமூகமாக கணேசன் முடித்து வைப்பதை நோக்கி காட்சிகள் நகர்ந்து கொண்டு வருவதால், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
320 எபிசோடுகளை வெற்றிகரமாக எட்டி உள்ள இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர், இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்கள் சற்று அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் பல சீரியல்கள் 2 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரே வருடத்தில் இந்த சீரியல் முடிவை எட்டியுள்ளது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!