- Home
- Cinema
- Biggboss Tamil 6: பட வாய்ப்பு குறைந்ததால்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்குகிறாரா அமலா பால்?
Biggboss Tamil 6: பட வாய்ப்பு குறைந்ததால்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்குகிறாரா அமலா பால்?
நடிகை அமலா பால், பட வாய்ப்பு குறைந்ததால் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், அடுத்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், வழக்கத்தை விட இந்த முறை போட்டியாளர்கள் தேர்வும் மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..
அதன்படி விஜய் டிவியின் பேமஸ் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, ராஜா ராணி அர்ச்சனா, ஷில்பா மஞ்சு நாத், தர்சன், கார்த்திக் குமார் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அமலா பாலும் கலந்து கொள்ள உள்ள வாய்ப்புகள் உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. சமீப காலமாக அமலா பாலுக்கு, பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க இந்த நிகழ்ச்சியை அவர் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வந்தாலும், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!
ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா பால் கலந்து கொண்டு பேசினால்... இவருக்கும் ஏ.எல்.விஜய்க்கும் இடையே மலர்ந்த காதல், பின்னர் விவாகரத்தில் முடிய என்ன காரணம்? இரண்டாவது திருமண சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: உள்ளாடை மட்டும் அணிந்து... உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் - டிரெண்டாகும் கிளாமர் கிளிக்ஸ்