உள்ளாடை மட்டும் அணிந்து... உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் - டிரெண்டாகும் கிளாமர் கிளிக்ஸ்
Ramya Pandian : சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வந்தாலும், இடையிடையே போடோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியன், டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து கவனம் பெற்றார். இதையடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த ரம்யா பாண்டியன், ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்து இருந்தார்.
இதையடுத்து பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால், போட்டோஷூட் எடுக்கத் தொடங்கினர். அதன்படி மொட்டை மாடியில் சேலையில் கவர்ச்சியாக இடுப்பு தெரிய போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவின. இந்த ஒரே போட்டோஷூட் மூலம் அவர் வேற லெவலில் பாப்புலர் ஆனார்.
இதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியனுக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இதையும் படியுங்கள்... சோசியல் மீடியாவில் டிரெண்டான பொன்னியின் செல்வன் சேலைகள்... விற்பனைக்கு திடீர் தடை விதிப்பு - காரணம் இதுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், அதன்மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்நிகழ்ச்சியிலும் பைனல் வரை முன்னேறி டைட்டில் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார் ரம்யாஅ. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
அதன்படி தற்போது இடும்பன்காரி, மம்முட்டி உடன் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வந்தாலும், இடையிடையே போடோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது படுகிளாமராக போடோஷூட் நடத்தி இருக்கிறார்.
கருப்பு நிற பிரா மட்டும் அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்தபடி இருக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன. சினிமாவில் கிளாமராக நடிக்கவும் தயார் என்பதை சூசகமாக தெரிவிக்கும் விதமாக அவர் இவ்வாறு போட்டோஷூட் நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி