Asianet News TamilAsianet News Tamil

கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி

கிளாமரை விட எனக்கு குடும்பப் பாங்கான ரோல்கள் அதிகம் கிடைக்கும். தாவணி பாவாடை, கிழிந்த புடவை என உடைகளை எனக்கு தருவார்கள் என கூறியுள்ளார் கூறியுள்ளார் மீனா. 

Actress Meena birthday special her interview goes viral
Author
First Published Sep 16, 2022, 1:55 PM IST

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான கண்ணழகி மீனா 90களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே தனது காதல் கணவர் வித்யாசாகரின் மறைவால் மனமுடைந்த மீனா மெல்ல மெல்ல அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் முன்னதாக ஒரு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் சினிமாவில் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலைக்கு வருவேன் என நம்பவே இல்லை. என் குடும்பத்தில் யாரும் சினிமாவை சேர்ந்தவர்கள் அல்ல. இந்த பெரிய பயணத்திற்கு காரணம் எனது அம்மா தான். நான் என் அம்மா சொல்படி தான் கேட்டேன். எனக்கு உலகமே தெரியாது. திருமணத்திற்கு பிறகு தான் நான் உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதிலும் என் குழந்தை பிறந்த பிறகு எனக்கு தைரியம் அதிகமானது. திருமணத்திற்கு முன் இருந்த மீனாவிற்கும் தற்போது இருக்கும் மீனாவிற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. முன்னதாக என் தாயார் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் போதுமான வரவேற்பு இருக்காது என அடிக்கடி என்னிடம் தெரிவித்து வருவார். அவரது சொல் தான் என்னை பக்குவப்படுத்தியது என தெரிவித்துள்ளார். 

அதோடு தனுஷ், விஜய் சேதுபதி இருவருடனும் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை. அவர்கள் இருவரும் நல்ல நடிகர்கள். விஜயசாந்தி மாதிரி சண்டை போடும் கதாபாத்திரங்கள் அதிகமாக எனக்கு கிடைத்தது. ஆனால் பயம் காரணமாக அந்த கதாபாத்திரங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் சத்யராஜ், கமல் போன்றவர்கள் பெண்கள் வேடமிட்டு. நடித்திருக்கிறார்கள். ஆனாலும் அரவிந்த்சாமிக்கு தான் பெண் வேடம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என கலகலப்பாக பேசியுள்ள மீனா,  என்னை அடாயனப்படுத்தியது நாகேஸ்வரராவுடன் நான் நடித்த தெலுங்கு படம் தான். நாகேஸ்வரராவ் என்னை மிகவும் உயர்வாக பாராட்டினார். அவர் பாராட்டியதுதான் எனக்கு வாழ்வில் பெருமையான விஷயம் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...HBD Meena : சினேகா அக்காவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா...

Actress Meena birthday special her interview goes viral

கஸ்தூரி ராஜா சார் தான் கதை சொல்லி என் ராஜாவின் மனசிலே படத்தின் கதைக்குள் என்னை கொண்டு வந்தார். பாதி வந்தாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். மதுரை ஸ்லாங்கில் பேசும் டயலாக் ஒன்றை பேச சொன்னார். நானும் பேசினேன் எனக்கே அது 100% திருப்தி இல்லை. கேமரா முன் நன்றாக வரும் சார் என்று கூறினேன். அதையும் மீறி எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தார். த்ரிஷியம் தான் என்னோட கம்பேக் மூவி. கதை கேட்டு எனக்கு ரொம்ப பிடித்தது. அப்போது எனது குழந்தை மிகச் சிறியவளாக இருந்தால். அதனால் நடிக்க முடியாது என கூறிவிட்டேன். இருந்தும் மீண்டும் என்னை அனுகிய படக்குழு நீங்கள் வந்தால் தான் சரியாக இருக்கும் உங்கள் வசதிக்கு தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம் என கூறினர். பின்னர் தான் ஒப்புக்கொண்டேன் 

மேலும் செய்திகளுக்கு...VTV தொடங்கி VTK வரை... சாதனைகள் நிறைந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியின் சக்சஸ் ஸ்டோரி இதோ

முதலில் மகேஸ்வரி எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். பின்னர் குஷ்பூ, சங்கவி, ரோஜா போன்றவர்கள் உடன் நல்ல நட்பு இருந்தது. சிட்டிசன் படத்தில் ரொம்ப சிரமப்பட்டு நடித்தேன். கடற்கரை மணலில் சூட்டோடு நடித்தோம். அப்போது தான் மீனவர்களின் சிரமம் எனக்கு புரிந்தது. கிளாமரை விட எனக்கு குடும்பப் பாங்கான ரோல்கள் அதிகம் கிடைக்கும். தாவணி பாவாடை, கிழிந்த புடவை என உடைகளை எனக்கு தருவார்கள். எனக்கு கிளாமர் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆனால் அது போன்ற ரோல்கள் எனக்கு பெரும்பாலும் கிடைத்ததில்லை. இதனால் கிளாமர் நடிகைகளை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும் என கூறியுள்ளார் மீனா.

இதையும் படியுங்கள்... நான் அவன் இல்லை.. நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர் சிங் - இது உலகமகா நடிப்புடா சாமி

நெஞ்சங்கள் திரைப்படத்தில் சிவாஜி சார் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு திருமணத்தில் என்னைக் கண்ட சிவாஜி சார் இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.  என் வீட்டிற்கு வந்த இயக்குனர் என் அம்மாவிடம் என்னைப் பற்றி கேட்டுள்ளார். அதற்கு என்னம்மா பிளே ஸ்கூல் போயிருக்கு எனக் கூற அவரை நடிக்கசார் கேட்டு வரச் சொன்னார் என்று விஷயத்தை கூறியுள்ளார் இயக்குனர். மேலும் அது ஒரு ஆண் குழந்தை கதாபாத்திரம் அதற்காக என் முடியை வெட்ட கூறியுள்ளனர். அதற்கு என் தாய் மறுக்க எனக்காக அந்த கதாபாத்திரத்தை பெண் குழந்தையாக மாற்றியுள்ளனர். அப்படித்தான் என் பயணம் தொடங்கியது என பேசி உள்ளார் நடிகை மீனா.

Follow Us:
Download App:
  • android
  • ios