HBD Meena : சினேகா அக்காவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா...

சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

Actress Meena celebrated her birthday by cutting a cake with sneha sister

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1986 வரை தொடர்ந்து பயணித்து வந்த மீனா பின்னர் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். குழந்தையாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். தொடர்ந்து தமிழில் பன்னீர் நதிகள், உயிரே உனக்காக, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் குழந்தையாக நடித்திருந்தார். தெலுங்கில் மூன்று படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்ட மீனா பின்னர் ஒரு புதிய காதல் என்னும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு போதுமான வரவேற்பை கொடுக்கவில்லை.

இதை அடுத்து என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக சோலையம்மா கதாபாத்திரத்தில் நடித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றார் மீனா. இதன் பின் முன்னணி நாயகர்களுடன் நடக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், கமலஹாசன், சரத்குமார், பிரபு என அன்றைய டாப் டென் நாயகர்களுக்கு ஜோடியாகி தனது நாயகி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார் மீனா. 

மேலும் செய்திகளுக்கு...VTV தொடங்கி VTK வரை... சாதனைகள் நிறைந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியின் சக்சஸ் ஸ்டோரி இதோ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

இதையும் படியுங்கள்... நான் அவன் இல்லை.. நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர் சிங் - இது உலகமகா நடிப்புடா சாமி

கண்ணழகி மீனா இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்த இவருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம். 90களில் முன்னணி நடிகையாக இருந்த  மீனாவுக்கு ஃபிலிம் பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல பாராட்டுக்கள் கிடைத்திருந்தது. அதோடு தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. சினிமாவிலும் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இந்த சோகத்தில் இருந்து இவரை தேற்றுவதற்கு அவரது தோழிகள் பலவாறாக முயற்சி செய்து வருகின்றனர்.அதன்படி  தனது 46வது பிறந்த நாளை காணும் மீனாவை மகிழ்ச்சி படுத்துவதற்காக  சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மாநாடு பட வசூல் சாதனைகளை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்த வெந்து தணிந்தது காடு - முதல் நாள் வசூல் இதோ

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios