- Home
- Cinema
- மாநாடு பட வசூலை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் வெந்து தணிந்தது காடு - முதல் நாளே இவ்வளவு வசூலா?
மாநாடு பட வசூலை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் வெந்து தணிந்தது காடு - முதல் நாளே இவ்வளவு வசூலா?
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் 6 ஆண்டு இடைவெளிக்கு பின் உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்து உள்ளார். இதில் நடிகர் சிம்பு முத்துவீரன் என்கிற 20 வயது இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. சிம்புவின் கெரியரில் இதுவரை இல்லாத அளவு அதிகளவு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டது இப்படத்திற்கு தான். மொத்தம் 200-க்கு மேற்பட்ட அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன.
இதையும் படியுங்கள்... ஒருபக்க சேலையை சரியவிட்டு..கண்களை கவரும் சர்பேட்டா பரம்பரை நடிகை
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துவதாகவும் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலில் மாஸ் காட்டி உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் 7.4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். அதேபோல் இப்படம் மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. சிம்புவின் கெரியரில் முதல் நாளில் ரூ.8.5 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த படமாக மாநாடு இருந்து வந்த நிலையில், தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் அதனை முறியடித்துள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் இப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.94 லட்சம் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய்-லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்த தனுஷ்... குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.