கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..

 தற்போது புடவையில் ஜெனிலியா கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

actress Genelia latest saree style photos

வெகுளியான முகத்தோடும் துரு துருவென்ற நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ஜெனிலியா. இவர் முதன் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார். பின்னர் பாய்ஸ் படத்தின் மூலம் கடந்த 2003 ஆண்டு தனது இரண்டாவது படமாக தமிழில் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றாலும் நாயகிக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக சச்சினில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. கல்லூரி மாணவி ஷாலினியாக வரும் நாகியை விஜய்க்கு மட்டுமல்ல பார்த்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது.

ஆனாலும் தெலுங்கில் தான் இவருக்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. மீண்டும் பரத் நாயகனாக நடித்த சென்னை காதல் படத்தில் நாயகியாக தோன்றினார். தொடர்ந்து இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. சிறு பெண் போல இவர் விளையாட்டுத்தனமாக பேசும் ஒவ்வொரு டயலாக்குகளும் இன்று வரை மீம்ஸுகளாக உயிர் வாழ்ந்து வருகிறது.அந்தப் படத்தின் மூலம் அதிக ரசிகர் பட்டாளமம் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது .இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி தோன்றியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

பின்னர் பாலிவுட், தெலுங்கு, மலையாளம் என இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. ஆனால் தமிழில் உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜெனிலியாவிற்கு இன்று வரை தமிழ் திரையுலகில் தனி பெயர் உண்டு. தனது நடிப்பால் பல விருதுகளை வென்றெடுத்த ஜெனிலியா. இலங்கை விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

மேலும் செய்திகளுக்கு...HBD Meena : சினேகா அக்காவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

மேலும் செய்திகளுக்கு...VTV தொடங்கி VTK வரை... சாதனைகள் நிறைந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியின் சக்சஸ் ஸ்டோரி இதோ

முன்னதாக முன்னணி நடிகையாக இருந்த காலத்திலேயே ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் சினிமாக்களில் தோன்றி வந்த இவர் தற்போது மராத்தி மற்றும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்து வருகிறார். இதற்கு இடையே தனது குடும்பத்துடனான  அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜெனிலியா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் சிறிதளவு கூட அழகு குறையாது வெளியிடும் வீடியோக்களும் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது புடவையில் இவர் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios