கட்டுக்கடங்காத கவர்ச்சி... பிகினி உடையில் சிக்கென இருக்கும் உடலை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சித்தி இத்னானி..!
சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள, நடிகை சித்தி இத்னானியின் பிகினி ஹாட் புகைப்படங்கள் இதோ...
சித்தி இத்னானி, குஜராத்தி மொழியில் வெளியான 'கிராண்ட் ஹாலி' என்கிற படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
அந்த வகையில், தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ரெட்டிக்கு ஜோடியாக... 'ஜம்ப லகிடி பம்பா' என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது.
மேலும் செய்திகள்: வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?
அதே ஆண்டு 'பிரேமா கதா சித்ரம் 2' படத்தில் நடித்த இவருக்கு, அடுத்தடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. இவரது நடிப்பும், திறமையையும் தமிழ் இயக்குனர்களையும் கவனிக்க வைத்த நிலையில், தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு சிம்பு ரசிகர்கள்மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதே போல் சித்தி இத்னானி நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்: மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!
எனவே அடுத்தடுத்த தமிழ் படங்களில் இவர் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாவதற்கு முன்பாகவே, சித்தி இத்னானி, நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக... நூறு கோடி வானவில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பிறந்து வளர்ந்த சித்தி இத்னானியின் தந்தை, அசோக் இத்னானி, குரல் மாடுலேஷன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவரது தாயார், ஃபால்குனி டேவ், ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவர்.
மேலும் செய்திகள்: நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட சித்தி இத்னானி, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்த போதிலும், ரசிகர்களை கிறங்கடிக்கும் விதமாக, விதவிதமான பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.