மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!
நடிகர் அஜித் நான் என்ன கொலைகாரனா... கொள்ளைக்காரனா என ரசிகர் ஒருவரிடம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிப்பை தாண்டி, பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், தற்போது பைக் ரைடில் தீவிரம் காட்டி வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த இவர், இப்போதெல்லாம் அதிகம் வெளியில் தான் சுற்றி கொண்டிருக்கிறார். இதற்க்கு முக்கிய காரணம், பைக்கில் உலகையே சுற்றி வர வேண்டும் என அஜித் எடுத்துள்ள முடிவு தான். படப்பிடிப்பு நாட்களை தவிர மற்ற ஓய்வு நாட்களில் எல்லாம், பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' சொல்... லிரிகள் பாடல் வெளியானது..! இசையால் மாயாஜாலம் செய்து உருக வைத்த ஏ.ஆர்.ரகுமான்!
அந்த வகையில், வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர், ரஷ்யாவில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக் ரைடு செய்த அஜித், இந்தியா திரும்பிய பின்னர், துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்தினார். இதை தொடர்ந்து, சமீபத்தில் ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு எச்.வினோத் தற்போது தயாராகி வரும் நிலையில், கிடைத்த ஓய்வு நேரத்தில், இமயமலைக்கு ட்ரிப் அடித்துள்ளார் அஜித்.
மேலும் செய்திகள்: உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு
இமயமலைக்கு சென்றுள்ளது மட்டும் இன்றி, கேதார்நாத், பத்ரிநாத், புத்தர் கோவில் என... பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அங்கு தன்னை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்க ஆசைப்படும் ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேறு லெவலுக்கு வைரலாகி வருகிறது. சிலர் அஜித் பைக் ரைடு சென்றுள்ளதை அறிந்து, எப்படியும் அவரை பார்த்து விட வேண்டும் என, பைக் ரைடு செல்கின்றனர் என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோ மூலம் தெரிகிறது.
அஜித் தன்னுடன் பைக் ரைடில் ஈடுபட்டுள்ள குழுவினருடன், நின்று கொண்டிருக்கும் போது... அஜித்தை கண்ட சந்தோஷத்தில்,ரசிகர்கள் சிலர், உங்களை 3 நாட்களாக தேடி வருவதாக கூறுகின்றனர். இதற்க்கு அஜித் நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா என ரசிகர்களிடம் கிண்டலாக கேட்கிறார். பின்னர் அந்த ரசிகர்கள் எதோ அஜித்திடம் பேசுகிறார்கள். அஜித்தும் அவர்களுடன் பேசுகிறார். 30 செகண்ட் மட்டுமே இந்த வீடியோ ஒளிபரப்பாகிறது. எனினும் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானாலும் அதில் அஜித்தின் குரலை கேட்கமுடியவில்லை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அஜித்தின் குரலை கேட்க முடிகிறது... இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் என கூறி இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் வைராலாக்கி வருகிறார்கள்.