'பொன்னியின் செல்வன்' சொல்... லிரிகள் பாடல் வெளியானது..! இசையால் மாயாஜாலம் செய்து உருக வைத்த ஏ.ஆர்.ரகுமான்!
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள சொல் லிரிகள் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், வருகிற இந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி, உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவ்வப்போது இந்த படத்தின் புதிய அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சொல் பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
நெருங்கிய தோழிகளான குந்தவை (த்ரிஷா ) மற்றும் வானதி (சோபிதா துலிபாலா) இருவரும்... காதலர் யார் என கேட்டு உரையாடுவது போல் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது. அருவியின் ஓசை போன்ற இசை பின்னணியில்... முத்தான வார்த்தைகள் கொண்டு, ரக்ஷிதாவின் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் இசையில் ஏ.ஆர்.ரகுமான் மேஜிக் செய்துள்ளதாகவும், இந்த பாடலை படத்தில் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ரகுமான், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் செய்திகள்: அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற ‘ராட்சஸ மாமனே’ என்கிற பாடலின் லிரிக்கல் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த 'சொல்' லிரிகள் வீடியோ பாடலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.