வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?
நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 2-வது நாள் குறித்த தகவல் தற்போது வெளியாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் சிம்பு நடித்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சிம்பு நடிப்பில், கடைசியாக வெளியான 'மாநாடு' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த நிலையில், சிம்பு கௌதமேனன் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மேலும் செய்திகள்: பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் வாணி போஜன்... சின்னத்திரை நயன்தாரா குறித்து வெளியான ஷாக்கிங் சீக்ரெட்
சிம்பு தன்னுடைய வழக்கமான கதை தேர்வில் இருந்து சற்று வித்தியாசமாக, இந்த கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். அதேபோல் கெளதம் மேனனும் இதுவரை இயக்கிய பட பாணியில் இருந்து விலகி இப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்திற்காக சிம்பு சுமார் 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து நடித்திருந்தார்.
திருநெல்வேலியில் ஒரு குக்கிராமத்தில், முள் வெட்டி பிழைப்பு நடத்தும் முத்து என்கிற இளைஞகர், வயிற்று பிழைப்புக்காக, வேலை தேடி மும்பைக்கு செல்ல... ஒரு அடியாள் கேங்கில் மாட்டி கொள்கிறார். அதில் இருந்து வெளியே வரமுடியாமல் ஒரு நிலையில் சிம்பு முத்து பாய்யாக மாறுகிறார். இதுவே முதல் பாகத்தில் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் முத்துபாயில் மற்றொரு பக்கம் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்: கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்கும் பூனம் பஜ்வா... தெனாவட்டு நடிகையின் டூமச் கிளாமர் போட்டோஸ் இதோ
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக 12 முதல் 13 கோடி வரை தகவல் வெளியான நிலையில், இரண்டாவது நாளிலும் சுமார் 9 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே படம் வெளியான இரண்டே நாட்களில், சுமார் 23 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சில காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், இன்று வெளியாகி உள்ளது. எனவே கடந்த இரண்டு நாட்களை விட வசூலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: திடீரென மாலத்தீவுக்கு விசிட் அடித்து... நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போட்டோஷூட் நடத்திய அமலா பால்
அதை போல் 'வெந்து தணிந்த காடு' படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருவதாலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.