திடீரென மாலத்தீவுக்கு விசிட் அடித்து... நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போட்டோஷூட் நடத்திய அமலா பால்
Amala Paul : நாயகிகளின் கனவுதேசமான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் அங்கு நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை அமலா பால், பள்ளி படிப்பை முடிக்கும் முன்னரே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். முதன்முதலில் தனது 17 வயதில் மலையாள படத்தில் நடித்த அமலா பாலுக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது தமிழில் வெளிவந்த மைனா தான்.
பிரபுசாலமன் இயக்கிய இப்படத்தில் நடிகர் வித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தபோது நடிகை அமலாபாலுக்கும், அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். இதன்பின் அவர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... சவுக்கு சங்கர் கதையை படமாக எடுக்க பிளான் போடும் வெற்றிமாறன்...?
குறிப்பாக விவாகரத்துக்கு பின் பல்வேறு துணிச்சலான வேடங்களில் நடித்து வருகிறார் அமலாபால். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை என்கிற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் இவர் தயாரித்து நடித்திருந்த கடாவர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நாயகிகளின் கனவுதேசமான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அமலாபால். அங்கு விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார்.
அந்த வகையில், நீச்சல் உடை அணிந்து கடற்கரை ஓரத்தில் நின்றபடி விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன. இனி வரும் நாட்களில் மேலும் சில பிகினி போட்டோஸ் வெளிவரவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... பர்ஸ்ட் ‘சுறா’ படம் பண்றதா இருந்தது... நான் தான் ரிஜெக்ட் பண்ணிட்டு VTV பண்ணேன் - சிம்பு சொன்ன ஷாக்கிங் தகவல்