பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் வாணி போஜன்... சின்னத்திரை நயன்தாரா குறித்து வெளியான ஷாக்கிங் சீக்ரெட்
Vani bhojan : பிரபல நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை வாணி போஜன் குறித்து பகீர் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என பெயரெடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இதையடுத்து நடிகை வாணி போஜனுக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்தன. இதனால் சீரியலில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் வாணி. கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்து நடித்து வந்த வாணி போஜனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி உள்ளதாம். இதற்கு அவர் பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்கும் பூனம் பஜ்வா... தெனாவட்டு நடிகையின் டூமச் கிளாமர் போட்டோஸ் இதோ
பிரபல நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை வாணி போஜன் குறித்து பகீர் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “வெப் தொடர் ஒன்றில் நடித்தபோது ஜெய்யும் வாணி போஜனும் நெருக்கமானார்கள். இதனால் வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் வாணி போஜன் தினமும் தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வருகிறார்கள் என சொல்கிறார்.
வாணி போஜன் கதை கேட்கும்போதெல்லாம் ஜெய் கூடவே இருக்கிறார். ஜெய் சம்மதித்தால் தான் வாணி போஜன் கதையை ஒப்புக்கொள்கிறார். வாணி போஜன் தற்போது ஜெய்யுடன் லிவ்விங் டுகெதரில் இருப்பதாக தகவல். சமீபத்தில் வாணி போஜன் கூட உஷாராகிவிட்டேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.. இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியவில்லை” என பயில்வான் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நூறாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில்... டாப் மோஸ்ட் கலெக்ஷனை அள்ளிய படம் விக்ரம் தான் - அடிச்சு சொன்ன பிரபலம்