Vijay Photos: 'வாரிசு' லுக்கில் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!
தளபதி விஜய், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும், வசூல் மன்னனாகவும் இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்புக்கு கோலிவுட் திரையுலகை தாண்டி, டோலிவுட், மாலிவுட் என மொழி கடந்து, பல ரசிகர்கள் உள்ளனர். எனவே இவருடைய திரைப்படங்கள் எப்போது வெளியானாலும், அந்த படங்களை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிறமொழி ரசிகர்களும் தொடர்ந்து வரவேற்று வருகின்றனர்.
அவர்களுக்காக சமீப காலமாக தளபதி விஜயின் படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது வருகிறது. ஆனால் தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கியுள்ள 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் சங்கீதா, சம்யுக்தா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.
எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மற்றும் வியாபார பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் இருந்து வெளியான 2 சிங்கள் பாடல்களுமே வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் தளபதி விஜய் வாரிசு பட லுக்கில், திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது.
'பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்... என்ன தெரியுமா?
மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.வி.முரளிதரன் அவர்களின் மகன், திருமண வரவேற்பு இன்று சென்னையில் நடந்த நிலையில், விஜய் வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு கலர் பேண்ட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷ் ஆன லுக்கில், இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.