அதிர்ச்சி... சீரியல் நடிகையை பணத்துக்காக கொடூரமாக கொலை செய்த மகன்! நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்..!

பழம்பெரும் சீரியல் நடிகையை, அவரது மகனே பணத்துக்காக கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

shocking mumbai actress murdered by own son over property dispute

இந்தியில் சில திரைப்படங்களிலும், பல சீரியல்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் வீணா கபூர். மிகவும் யதார்த்தமாக நடிக்கும் இவருடைய நடிப்புக்கு, பல ரசிகர்கள் உள்ளனர். 74 வயதாகும் இவர், மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருடைய மூத்த மகன் சச்சினுக்கு வீணா கபூருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல நேரங்களில் அவருடைய மூத்த மகன் சச்சின், இவரிடம் சண்டை போட்டுள்ளார்.

shocking mumbai actress murdered by own son over property dispute

வீணாக்கப் கபூரின் இரண்டாவது மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அடிக்கடி தன்னுடைய தாயாருக்கு போன் செய்து விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் பல்வேறு முறை போன் செய்து செய்தும், வீணா போன் தொடர்ந்து எடுக்கப்படாததாலும், ஸ்விட்ச் ஆஃப் என வந்ததாலும் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்காவில் இருந்தபடியே, மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய தாயை காணவில்லை என்றும், அவர் குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

shocking mumbai actress murdered by own son over property dispute

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வீணா கபூரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அவர்களும் கடந்த சில தினங்களாக வீணா கபூரை காணவில்லை என தெரிவித்தனர். இதை அடுத்து அவருடைய வீட்டை சோதனையிட்டபோது, அங்கு இவர் கொலை செய்யப்பட்டதற்கான ரத்தக்கரை மற்றும் சில தடயங்கள் கிடைத்துள்ளது.

shocking mumbai actress murdered by own son over property dispute

இதைத் தொடர்ந்து வீணா கபூரின் மூத்த மகன், சச்சின் கபூரிடம் விசாரணை நடத்திய போது, அவர் சொத்துக்காக தன்னுடைய வீட்டு வேலையால் மூலம் பேஸ்பால் மட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்ததும், கொலையை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என, சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் வீசி எறிந்ததும் தெரிய வந்தது. பெற்ற தாயையே கொலை செய்த அவருடைய மகன் சச்சினை போலீசார் கைது செய்து, நடிகை வீணா கபூரின் உடலை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மும்பை திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios