MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்... என்ன தெரியுமா?

'பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்... என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'பாபா' திரைப்படம் 20 வருடங்களுக்கு பின்னர், நேற்று சில மாற்றங்களுடன், டிஜிட்டல் முறையில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் கிளைமேக்ஸில் நிகழ்ந்த மாற்றம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 10 2022, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ல் வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். ரஜினியை வைத்து  அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற ஹிட் படங்களை இயக்கிய  சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார். ரஜினிகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த படம், மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அப்போதைய டாப் ஸ்டார் நடிகையான மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி ரித்திகா காதல் கணவருடன்... எங்கு ஹனி மூன் சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!


 

35

ரஜினிகாந்த் தான் தெய்வமாக வழிபடும், பாபாஜியின் மகிமைகளை எடுத்து கூறும் விதமாக இந்த படத்தின் திரைக்கதையை எழுதி இருந்தார். அதே நேரம்... முழு தெய்வீக படமாக மட்டுமே இல்லாமல், காதல் ஆக்ஷன், அரசியல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருந்தது. இந்த படத்தில் ரஜினி காட்டிய அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. பின்னர் ரஜினி அரசியல் குறித்து அறிவித்தபோது... அந்த முத்திரையை தான் தன்னுடைய கட்சி கொடியிலும் பயன்படுத்தி இருந்தார்.
 

45

இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் இந்த படத்தை ரஜினிகாந்த் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்... படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியதோடு, கிளைமேக்ஸ் காட்சியிலும் மாற்றம் செய்திருந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது, இந்த படம் புது பொலிவுடன் நேற்று வெளியான நிலையில்... இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமேக்சில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணி போல் வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் ஹன்சிகா..! கணவர் மற்றும் குடும்பத்துடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!

55

அதாவது ‘பாபா’ படத்தில், அரசியல் பாதையே சரி என்ற கிளைமேக்ஸ் இருக்கும். இன்றைக்கு தனது ரசிகர்களே அதை விரும்பமாட்டார்கள் என உணர்ந்த அவர், மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் கிளைமேக்ஸை மாற்றியுள்ளார். ‘நீ உன் தாயின் மனதை காயப்படுத்தி இருக்கிறாய். எனவே மீண்டும் பிறந்து தாயின் ஆசையை நிறைவேற்று. நேரம் வரும்போது உன்னை அழைக்கிறேன்’ என பாபா கூறுவது போல் இறுதிகாட்சி மாற்றப்பட்டுள்ளதாம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved