குக் வித் கோமாளி ரித்திகா காதல் கணவருடன்... எங்கு ஹனி மூன் சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!
விஜய் டிவி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், இவரது ஹனிமூன் போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரித்திகா. இதற்கு முன்பு ராஜா ராணி சீசன் 1 சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
அதே போல் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றான, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட இவர்... வந்த வேகத்திலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும், இவர் பாலாவுடன் சேர்ந்து அடித்த லூட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, இவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இவர் விஜய் டிவி தொலைக்காட்சிகள் க்ரியேட்டிவ் புரடியூசராக வேலை செய்யும் வினு என்பவரை கடந்த சில வருடங்களாக ரித்திகா காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கேரளாவில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக சமீபத்தில் நடந்தது. இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, புகழ், ஷகிலா, பாரதி கண்ணம்மா வினுஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு தற்போது ரித்திகா ஹனிமூன் பறந்துள்ளார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள... திரையுலக நடிகைகளின் ஃபேவரட் இடமான மாலத்தீவுக்கு தன்னுடைய காதல் கணவருடன் ரித்திகா ஹனிமூன் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்தபடி ரித்திகா மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.