MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Simran:20 வயதில் நிறைவேறாத ஆசை... 46 வயதில் 62 வயது நடிகருக்கு ஜோடி போடும் சிம்ரன்! யார் அந்த நடிகர் தெரியுமா?

Simran:20 வயதில் நிறைவேறாத ஆசை... 46 வயதில் 62 வயது நடிகருக்கு ஜோடி போடும் சிம்ரன்! யார் அந்த நடிகர் தெரியுமா?

46 வயதில், 62 வயது நடிகருக்கு நடிகை சிம்ரன் ஜோடி சேர உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2022, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கனியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இயக்குனர் சபாபதி தேவசதேக்ஷின மூர்த்தி இயக்கத்தில் வெளியான, ரொமான்டிக் காமெடி திரைப்படமான 'விஐபி' படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சிம்ரன். இவர் நடித்த முதல் படமே சுமார் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது மட்டுமின்றி, இவருடைய நடன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
 

26

இதைத் தொடர்ந்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி, என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சிம்ரன் ரசிகர்கள் மனதில் தனக்காக தனி இடத்தை பிடித்தார்.

2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!
 

36

இவர் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது இவர் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்தி. இவர் திரையுலகில் அடி எடுத்து வைத்த போது, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான பிஸ்தா, சுந்தர பாண்டியன், ஹரிச்சந்திரன், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற பல ஹிட் படங்கள் வெளியானது.
 

46

எனவே நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்திலாவது, இணைந்து நடிக்க முடியாத என தன்னுடைய 20 வயதில் ஏங்கிய நடிகை சிம்ரனுக்கு, தற்போது 46 வயதில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வரும் 'அந்தகன்' படத்தில்,  நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார்.

தாரை தப்பட்டை கிழிய... வெளியானது அஜித்தின் 'சில்லா சில்லா' பாடல்..!

56

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை தியாகராஜன் இயக்க.. ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

66

26 வருடங்களுக்கு பின் நடிகை சிம்ரனின் ஆசை நிரைவேறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பாலிவுட் திரையுலகில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், கண்டிப்பாக தமிழில் இந்த படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வரும் பிரஷாந்த் இந்த முறை வெற்றிக்கனியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாவ்...சீரியல் நடிகை நீலிமாவின் குழந்தைகளா இது? செம்ம கியூட்... அசர வைக்கும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)
சிம்ரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved