வாவ்...சீரியல் நடிகை நீலிமாவின் குழந்தைகளா இது? செம்ம கியூட்... அசர வைக்கும் போட்டோஸ்!
இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் அழகு குறையாமல் இருக்கும் நடிகை நீலிமா இசையின் கியூட் குழந்தைகளின் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்த மிகவும் பிரபலமானவர் நீலிமா இசை. இவர் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் மொழி, தம், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், போன்ற படங்களில் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.
வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சீரியல்களில் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தினார்.
ஹீரோயினாக மட்டுமின்றி, முரட்டு வில்லி வேடத்திலும் பின்னி பெடல் எடுத்த இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்காக சீரியலை விட்டு விலகிய இவர் தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வபோது தன்னுடைய குழந்தைகளுடன் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது சீரியல்களில் எதுவும் நடிக்காததால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் பீச், கோவில், போன்ற வெளியிடங்களுக்கு குடும்பத்தோடு செல்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
எனினும் விரைவில் இவர் ஏதேனும் சீரியலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், விரைவில் சீரியலில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம் இவருடைய இரண்டு குழந்தைகளுமே குட்டி தேவதை போல் இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் மூலம் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.