மகாராணி போல் வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் ஹன்சிகா..! கணவர் மற்றும் குடும்பத்துடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா பார்ப்பதற்கு தேவதை போல்.. வெள்ளை நிற உடையில், அழகு தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கோலிவுட் திரையுலகின் மூலம் ஹீரோயினாக மாறியவர் நடிகை ஹன்சிகா. விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவுக்கு, இந்த மாதம் டிசம்பர் நான்காம் தேதி மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், தோழியின் முன்னாள் கணவரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹன்சிகா.
2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!
இவர்கள் இருவரின் திருமணமும் ஜெய்ப்பூரில் உள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா கோட்டையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு முன்னதாக சுமார் ஏழு நாட்கள் இவர்களின் திருமண கொண்டாட்டங்கள், மற்றும் சடங்குகள் மாப்பிள்ளை வீட்டு குடும்ப வழக்கப்படி நடந்தது.
மேலும் ஹன்சிகா தன்னுடைய தோழிகளுடன், பேச்சிலர் பார்ட்டி கிரீஸ் நாட்டில் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என கூறியுள்ள ஹன்சிகா, தற்போது திரைப்பட பணிகள் உள்ளதால், கணவருடன் எங்கேயும் ஹனிமூன் செல்லவில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் அவ்வபோது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஹன்சிகா, தற்போது வெள்ளை நிற உடையில்... தேவதை போல் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் தன்னுடைய கணவர் சோஹேல் கதூரியா, தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் உள்ளார் ஹன்சிகா.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் அடுத்தடுத்து நடிக்க உள்ள படப்பிடிப்புகளிலும் ஹன்சிகா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தன்னுடைய திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனத்திற்கு மிக பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.