Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!
நேற்றைய தினம் தேசிய விருதை பெற்ற மகிழ்ச்சியோடு இன்று தன்னுடைய 47-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில், அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியர்ந்து பாராட்டிய படங்கள் குறித்த தொகுப்பு இதோ...
நந்தா:
சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 'நந்தா' என கூறலாம். இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா கேங் ஸ்டாராக நடித்திருந்த இந்த படத்தில், சூர்யாவின் வேறு விதமான நடிப்பு திறனை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. மேலும் ஒரு பாசம் மிகுந்த மகனாகவும் இப்படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். இப்படத்திற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருது கிடைக்காதது ஏமாற்றம் என்றும் கூறலாம்.
கஜினி:
சூர்யா நடித்து 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த திரைப்படங்களில் ஒன்று 'கஜினி'. ஸ்டைலிஷான தொழிலதிபராகவும், தன்னுடைய காதலியை கொன்றவர்களை பழிவாங்கும் மெம்மரி லாஸ் உள்ளவராகவும் சூர்யா ஒரே படத்திற்காக... தன்னுடைய உடல் எடையை, ஏற்றியும் இறக்கியும் நடித்து அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அசினும், முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்திருந்தனர். இப்படத்திற்காக சூர்யா பல விருதுகளை வாங்கினாலும், தேசிய விருதை பெறமுடியவில்லை.
மேலும் செய்திகள்: நடன இயக்குனர் ஷோபி - லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து...
வாரணம் ஆயிரம்:
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா... அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் 'வாரணம் ஆயிரம்'. அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். மகனாக நடித்திருந்த சூர்யா... ஸ்டைலிஷான பையன், போதைக்கு அடிமையானவர், பின்னர் 6 பேக் ஆர்மி மேன் என வெரைட்டி காட்டி மிரள வைத்தார். சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்படத்திலும் தேசிய விருதை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை.
மேலும் செய்திகள்: ஒருவேளை சாப்பாடு 46 ஆயிரம் ரூபாயா? பில்லை பார்த்து ஷாக்கான பிரபலம்!
சிங்கம்:
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் சீரிஸ் அனைத்து பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், முதல் பாகம் அல்டிமேட் வெற்றி பெற்றது. 'காக்கா காக்கா' பட போலீஸ் சூர்யாவா இப்படி என அனைவரும் ஆச்சரிப்படும் அளவிற்கு பவர் பேக் பர்பாமென்ஸால் மிரளவைத்தார். காக்கி சட்டை, முதல் அவரது தோற்றம் என போலீஸ் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என பலரையும் நினைக்க வைத்தது இவரது கதாபாத்திரம். 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சூர்யா நடிப்பில் வெளியான மிக முக்கிய படங்கங்களில் ஒன்று.
மேலும் செய்திகள்: தமிழ் சினிமாவிற்கு இது பெரிய நாள்... தேசிய விருது பெற்ற சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து கூறிய தனுஷ்!
சூரரைப் போற்று:
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி தற்போது சூர்யாவிற்கு முதல் தேசிய விருதை பெற்று கொடுத்துள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், பணம் படைத்தவருக்கு மட்டுமே பிளைட்டில் செல்வது சாத்தியமானதாக கருதப்பட்ட நிலையில் அதனை சாமானியனுக்கு சொந்தமாக்கி தன்னுடைய கனவை எட்டி பிடித்தத ஒருவரது போராட்டம் என கூறலாம். நடிகர் சூர்யாவின் கண்கள் கூட இந்த படத்தில் நடித்ததை ரசிகர்களால் உணர முடிந்தது. நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவிற்கு இது மிகப்பெரிய பரிசு என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.