நடன இயக்குனர் ஷோபி - லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து...
பிரபல நடன இயக்குனர் சோபி மாஸ்டர் மற்றும் லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷோபி மாஸ்டர். பல முன்னணி நடிகர்களுக்கும் இவர்தான் தற்போது நடன இயக்குனராக இருந்து வருகிறார்.
இவரும் டான்சர் லலிதாவும் காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார்.
இதைத்தொடர்ந்து நடன இயக்குனர் சோபியின் மனைவி லலிதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், அவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தம்பதியினருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் மூலம் நடன இயக்குனராக திரையுரங்கில் அறிமுகமானவர் சோபி. இதை அடுத்து தற்போது தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடன இயக்குனர் என்கிற இடத்தை பிடித்துள்ளார்.
இவரும், இவருடைய மனைவியும் சென்னையில் நடன பள்ளி ஒன்றியம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது குழந்தை இவர்களுக்கு பிறந்ததை தொடர்ந்து, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .