தமிழ் சினிமாவிற்கு இது பெரிய நாள்... தேசிய விருது பெற்ற சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து கூறிய தனுஷ்!
கடந்த ஆண்டு 'அசுரன்' படத்திற்காக தேசிய விருதை பெற்ற நடிகர் தனுஷ், இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த தேசிய விருதுகள், திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், வல்லுனர்கள் போன்றவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைகிறது. இவ்விருதை வாங்க வேண்டும் என்பது திரைத்துறையில் உள்ள அனைவரது லட்சியம் என்றும் கூறலாம்.
அந்த வகையில் கலந்த ஆண்டு 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். இதை தவிர அசுரன் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் ஆகிய என 3 தேசிய விருதுகளை பெற்றது. அதே போல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி பெற்றார். இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் பெற்றார். இதை தவிர, 'ஒத்த செருப்பு' படத்திற்காக பார்த்திபனும், சிறந்த ஒளி அமைப்புக்கான விருதை ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான ரசூல்பூ குட்டியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: '68-வது தேசிய விருதுகள்' 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா..! முழு விவரம் இதோ...
கடந்த ஆண்டு இப்படி பல படங்களுக்கு பரவலாக விருதுகள் வழங்க பட்ட நிலையில், இந்த வருட விருது பட்டியலில் 3 படங்கள் மட்டுமே... மொத்தம் 10 விருதுகளை பெற்றுள்ளது. அதிலும் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா நடிப்பில் வெளியான, 'சூரரைப்போற்று' திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வாங்கியுள்ளது. அதே போல் வசந்த் இயக்கத்தில் வெளியான, 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் 3 விருதுகளையும், யோகி பாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்: ஷேம்.. ஷேம்... பாத்ரூமில் குளித்துக்கொண்டே போஸ் கொடுத்த மியா கலிஃபா..! கவர்ச்சியை அள்ளிக்கொட்டிய போட்டோஸ்!
இந்நிலையில் கடந்த ஆண்டு தேசிய விருதை வாங்கிய நடிப்பு அசுரன் 'தனுஷ்' ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில்... "தேசிய விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா மற்றும் எனது நல்ல நண்பர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு பெரிய நாள். மிகவும் பெருமை படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: எப்போதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் விளக்கு போட்டு உருகி உருகி வேண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான, 'தி கிரே மேன்' படம் இன்று நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜேம்ஸ் பாண்டு போல் தனுஷ் சண்டை காட்சியில் கலக்கி இருந்தாலும், அவரது காட்சிகள் 10 நிமிடம் மட்டுமே வருவது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் என்றே கூறலாம்.