எப்போதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் விளக்கு போட்டு உருகி உருகி வேண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கு போட்டு வேண்டி கொள்ளும் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருபவர், தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்கள், மகன்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வெளியே செல்லும் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் கூட, தனுஷுடன் அமெரிக்கா சென்ற மகன்கள் வீட்டுக்கு வந்த பின்னர், மகன்கள் இருவரையும் கட்டிப்பிடித்து சில நேரங்களில் தேவையானது இது மட்டுமே என, தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் செய்திகள்: ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!
இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது, மேலும் சிலர் தனுஷுக்கு போட்டியாக ஐஸ்வர்யா இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.
எந்த தான் ஐஸ்வர்யா மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், மிகவும் தெய்வ பக்தி கொண்டவர். எனவே ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இவர் காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கு போட்டு வேண்டி கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!
இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக...ஆடி வெள்ளி... எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளுடன் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
அதிலும் சிலர்... இன்று தனுஷின் 'தி கிரே மேன்' படம் ரிலீஸ் ஆவதால், ஐஸ்வர்யா வேண்டி கொண்டு கோயிலில் விளக்கு போட்டு வேண்டி கொள்வதாக கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: தனுஷ் - ரூஸோ சகோதரர்களுக்கு தலபுடலாக விருந்து வைத்த அமீர் கான்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஐஸ்வர்யா - தனுஷ் ஆகிய இருவருமே... அதிகார பூர்வமாக பிரிய போவதாக அறிவித்த பின்னர், மீண்டும் சமாதானம் ஆகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இவருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக கூறவில்லை என்பது குறிபிடத்தக்கது.