ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!
நடிகர் அஜித் வெளிநாட்டில் இருந்து, சென்னை ஏர்போர்ட் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் அஜித் வெளிநாட்டில் இருந்து, சென்னை ஏர்போர்ட் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்தை பொறுத்தவரை ஒரு இயக்குனரிடம் பணிபுரிவது அவருக்கு மிகவும் சவுகரியமாக தோன்றிவிட்டால், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அவருக்கு வழங்கி கொண்டே இருப்பார். அப்படி நேர்கொண்ட பார்வை, படத்தில் துவங்கிய எச்.வினோத் - போனி கபூர் உடனான கூட்டணி 3 ஆவது முறையாக தொடர்கிறது. சமீபத்தில் வெளியான வலிமையை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 61வது படத்தில் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்குமார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!
வழக்கம் போல் அஜித்தின் இந்த படமும், ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விரைவில் சென்னையிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கி கொள்ளை சார்ந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்காக சென்னை மவுண்ட் ரோடு போன்ற மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திலும் வலிமை படத்தை தொடர்ந்து சில பைக்கர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அஜித் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அஜித்தின் ஏர்போர்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க குடும்பத்துடன் பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது, அவருடன் எடுத்து கொண்ட புகைபடங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வந்தது. தன்னை சந்தித்து, புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் அஜித்தும் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.
மேலும் செய்திகள்: தனுஷ் - ரூஸோ சகோதரர்களுக்கு தலபுடலாக விருந்து வைத்த அமீர் கான்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தன்னுடைய விடுமுறை நாட்களை கழிந்து விட்டு அஜித் சென்னை வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தான் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அஜித் மிகவும் வேகமாக ஏர்போட்டில் நடந்து செல்லும் போது, ஏர்போட்டில் வேலை செய்பவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என அவரை அழைத்து தங்களது விருப்பத்தை கூற, அஜித் அவர்கள் பக்கத்தில் வந்து நின்று போஸ் கொடுக்கிறார். பொதுவாக பிரபலங்கள் வெளியில் வந்தால்... யார் தங்களை அழைத்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் அஜித் அப்படி நடந்து கொள்ளாமல், மிகவும் தன்மையாக நடந்து கொண்டதை கண்டு... ரசிகர்கள் நீங்க ரியல் ஹீரோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: அடங்காத மாளவிகா மோகனன்... குட்டை உடை கவர்ச்சியில் அதிகரித்து கொண்டே செல்லும் கிளாமர் அட்ராசிட்டி!
விறுவிறுப்பாக உருவாகி வரும் AK61 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் வீரா,ஜான் கொக்கன் மற்றும் மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கிறார்கள். பான் இந்தியா படமாக இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.