MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மனைவியின் ஆசை; 175 ஏக்கர் நிலத்தால் ஜெயிலுக்கு போய்.. கேரியரையே இழந்த சுமன்.!

மனைவியின் ஆசை; 175 ஏக்கர் நிலத்தால் ஜெயிலுக்கு போய்.. கேரியரையே இழந்த சுமன்.!

175 ஏக்கர் நிலத்தை வாங்கிய நடிகர் சுமன், மனைவியின் ஆசை படி அதில் ஒரு பகுதியை ராணுவ வீரர்களுக்கு  கொடுக்க நினைத்த நிலையில் இவர் ஜெயிலுக்கு செல்லும் நிலைக்கு சூழல் உருவானது இதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போம்.  

3 Min read
Author : manimegalai a
Published : Sep 30 2024, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Suman:

Actor Suman:

நடிகர் சுமனின் ரீல் வாழ்க்கை, நிஜ வாழ்க்கை பற்றி அனைத்துமே எல்லோருக்கும் தெரியும். ஆரம்பத்தில் சுமனின் கேரியர் உச்சத்தில் இருந்தார். அதன் பிறகு சுமன் எந்த மாதிரியான சர்ச்சையில் சிக்கினார்? ஏன் சிறைவாழ்க்கையை அனுபவித்தார் என்பது பற்றி பல சந்தேகங்கள் இருந்தன. சுமன் சர்ச்சையில் சிக்கியது உண்மைதான். சிறைக்கு சென்றதும் உண்மைதான். அதனால்தான் சுமன் தனது கேரியரில் பின் தங்கி விட்டார்.

ஆனால் அந்த சர்ச்சைக்கு பின்னால் சொல்லப்பட்ட காரணங்கள் வதந்திகள் மட்டுமே. அவரை வழக்கில் சிக்க வைத்தவர்கள் குறித்து பல பிரபலங்கள் உண்மைகளை தெரிவித்துள்ளனர். சுமன் தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இருப்பினும், சுமனைப் பற்றிய பரபரப்பான விஷயங்கள் அடிக்கடி வெளிச்சத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. சுமனின் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சையும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு சுமன் யாதகிரி குட்டா அருகே ஒரு சொத்தை வாங்கினாராம். 175 ஏக்கர் நிலம் அது. அந்த நிலத்தை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவரது மனைவி ஒரு யோசனை சொன்னாராம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Suman Land Controversy:

Suman Land Controversy:

அந்த இடத்தில் ஆயுர்வேத ரிசார்ட் கட்டுவோம் என்று சொன்னாராம். அதற்க்கு சுமனும் திட்டமிட்டார். அதன் பிறகு இன்னொரு யோசனை வந்ததாம். அந்த நேரத்தில் கார்கில் போர் நடந்தது. கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நானும் என் மனைவியும் நினைத்தோம். கார்கிலில் போராடிய வீரர்களுக்காக 175 ஏக்கரில் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தோம். அந்த நிலத்தில் சில மலைகள், குன்றுகள் உள்ளன. அதைத் தவிர கிணறு இருக்கும் இடத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்க முடிவு செய்ததாக சுமன் தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நிலம் சர்ச்சையில் சிக்கியது. தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சர்ச்சைகள் முடிவுக்கு வந்து எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ராணுவ வீரர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம் என்று சுமன் தெரிவித்துள்ளார். அந்த நிலத்திற்கு இரட்டை பதிவு செய்யப்பட்டதால் தான் சர்ச்சை ஏற்பட்டது என்று சுமன் தெரிவித்துள்ளார்.

சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!

34
Suman Movies

Suman Movies

ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கிய சுமன்.. சிரஞ்சீவிக்கும் போட்டியாக இருந்தார். அதன் பிறகு வழக்குகளால் பின் தங்கினார். சிறையில் இருந்து திரும்பி வந்து, முன்பு போல் இல்லாவிட்டாலும் நன்றாகவே நடித்து வருகிறார். தனது கேரியர் குறித்து சுமன் பேசுகையில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். என்னை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தார்கள். என்னுடைய குணாதிசயம் மோசமாக இருந்திருந்தால் இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ மீண்டும் என் அருகில் வந்திருக்க மாட்டார்கள். பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் நான் 5 அல்லது 6 படங்கள் நடித்துள்ளேன். நடிகைகளுடனும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடன் அதிக படங்களில் நடித்த நடிகைகள் என்றால் விஜயசாந்தி, பானுப்ரியா என்று சொல்லலாம்.
 

44
Suman Help to Army Men:

Suman Help to Army Men:

எல்லா நடிகைகளும் என்னை விரும்புவார்கள். சுமனுடன் நாங்கள் படம் நடிக்க மாட்டோம் என்று சொன்ன நடிகை ஒருவர் கூட இல்லை. அதற்கு காரணம் என்னுடைய குணம். படத்தில் காதல் காட்சி இருந்தாலும் கூட நடிகைகளிடம் கேட்டுவிட்டு தான் செய்வேன். அவர்கள் எங்களுக்கு இது சங்கடம் என்று சொன்னால் நான் அதை செய்ய மாட்டேன். சில சமயங்களில் நடிகைகள் முத்தக் காட்சிக்கு வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் இயக்குநர் வந்து ஷாட் நடக்கும் போது நீங்கள் தயங்காமல் முத்தக் காட்சியில் நடிங்க என்று சொல்வார்கள். இல்லை நான் அப்படி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். அந்த நடிகை சம்மதித்தால் மட்டுமே நான் முத்தக் காட்சியில் நடிப்பேன். அனுமதி இல்லாமல் நான் அப்படி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் தனது குணத்தை சுமன் கடைபிடித்து வந்தார்.

சுமன் தனது கேரியரில் வில்லனாகவும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் சுமன் வில்லனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் சுமனுக்கு புதிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. சுமன் சினிமா விஷயங்களை மட்டுமல்லாமல் அரசியல், சமூக விஷயங்கள் குறித்தும் பேசுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்! சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved