MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!

சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!

நடிகர் ஜெயம் ரவி பிரதர் பட விழாவுக்கு வந்த போது  ஆர்த்தி மீது பல குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், புதிய அறிக்கை மூலம் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் வாழ ஆசை படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Sep 30 2024, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jayam Ravi

Jayam Ravi

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே நடக்கும் விவாகரத்து சர்ச்சை, இன்னும் ஓயாத நிலையில்.. தற்போது புதிய அறிக்கை ஒன்றை ஆர்த்தி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்தில் இருந்தே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெயம் ரவி சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் நாயகனாக மாறிய பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jayam Ravi files complaint against Aarti report

Jayam Ravi files complaint against Aarti report

திருமணத்திற்கு பின்னர்... திரையுலகமே பார்த்து பொறாமை படும் வகையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மிகவும் அன்பான கணவன் - மனைவியாக வாழ்ந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். கடந்த ஆண்டு வரை இருவருமே ஒற்றுமையான ஜோடிகளாக இருந்த நிலையில், திடீரென இவர்கள் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது.

ஆர்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி... அவர் மீதான கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்தார். மேலும் இந்த முடிவு குடும்ப நலன் கருதி எடுத்திருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

35
Jayam ravi Statement

Jayam ravi Statement

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குடும்ப சூழ்நிலைக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், தனிப்பட்ட முடிவு என்றும் ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். மேலும் ரவியின் இந்த முடிவால் தானும் தன்னுடைய குழந்தைகளும் எதுவும் தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், தன்னுடைய கணவரை சந்தித்து பேச பலமுறை முயற்சி செய்தும், தான் தடுக்க பட்டதாக ஆர்த்தி இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல் மன வேதனையில் இருந்தாலும், பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே விரும்புவதாகவும்... ஆனால் தன்னுடைய நடத்தை மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியாகும் தகவல்களை மறுப்பது தன்னுடைய கடமையாகும் என்றும், இது போன்ற தகவல்கள் தன்னுடைய குழந்தைகளை காயப்படுத்துவதை தன்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கூறி இருந்த ஆர்த்தி, இந்த கடுமையான காலகட்டத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என உருக்கமாக கூறி இருந்தார்.

45
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

ஆர்த்தியின், இந்த அறிக்கையை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா இடையே தொடர்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதுபோன்ற தகவல்களை பிரதர் பட விழாவில் கலந்து கொண்ட போது ஜெயம் ரவி மறுத்தார். கெனிஷா தரப்பில் இருந்தும், இது ஆதாரமற்ற தகவல் என்றும், ஒருவரின் குடும்ப வாழ்க்கையில் என்னை இழுக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

மேலும் விவாகரத்து சர்ச்சை பற்றி, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி ஆர்த்தியால் வேலைக்காரர்கள் முன்பு அசிங்கப்படுத்த பட்டதாகவும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தன்னுடைய கை செலவுக்கு கூட ஆர்த்தியிடம்  கையேந்தும் நிலையில்தான் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். மேலும் தனக்கென ஒரு பேங்க் பாஸ் புக் கூட இல்லை. நான் சம்பாதித்த பணம் அனைத்தும், ஆர்த்தி மற்றும் மாமியாரிடம் தான் உள்ளது என கூறினார். அதே போல் ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக நீலாங்கரை காவல்நிலையத்தில் ஜெயம் ரவி கொடுத்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

55
Aarti Statement

Aarti Statement

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில்... தற்போது ஆர்த்தி சமாதான கொடி காட்டும் விதத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆர்த்தியின் இந்த அறிக்கையில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். நான் தனிப்பட்ட பேச்சுவாந்தாரிக்கு தயார் என்றேன். ஆனால் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்பது போன்றும். சட்ட ரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி கூறியுள்ளார். 

இந்த அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு, என் மௌனம் வெளிப்பாடாக இருப்பது... என்னுடைய பலவீனமோ, அல்ல குற்ற உணர்ச்சியோ அல்ல. என்னுடைய சுயமரியாதையை கடைபிடிக்கிறேன். உண்மையை மறைக்க விரும்பி, என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மெளனமாக இருக்கிறேன். அதே நேரம் நீதித் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒருமனதாக விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன்.  யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன் என ஆர்த்தி எமோஷ்னலாக பேசியுள்ளார். ஆர்த்தி மீண்டும் ஜெயம் ரவிக்கு சமாதான கொடி காட்டியுள்ளதால், பிள்ளைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved