MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சித்தாந்த்! பயிற்சியின் போது செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது என்னென்ன

ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சித்தாந்த்! பயிற்சியின் போது செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது என்னென்ன

பிரபல இந்தி சீரியல் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி, ஜிம்மில் உடல்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கீழே சுருண்டு விழுந்து மாரடைப்பால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது நீங்கள் செய்ய வேண்டியது... தவிர்க்க வேண்டியது என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. 

3 Min read
manimegalai a
Published : Nov 11 2022, 09:42 PM IST| Updated : Nov 11 2022, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமாக அறியப்படும் சீரியல் நடிகர், சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி. ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் சீரியல் நடிகராக மாறினார். 46 வயதாகும் இவர், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என மயங்கி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. 

213

சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சித்தாந்த் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது , மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வருவதால், இதுகுறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக ஜிம்மில் உடல் பயிற்சியின் போது செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாது பற்றி பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிரைவேட் டிடெக்ட்டிவாக வந்து காமெடியில் ரணகளம் செய்யும் சந்தானம்..! ஏஜென்ட் கண்ணாயிரம் ட்ரைலர் வெளியானது..!

313

இப்படி ஒருவித அச்சத்துடன் மக்கள் கேள்வி எழுப்ப காரணம், கடந்த ஆண்டு நவம்பரில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்,  ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தன்னுடைய 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதிலேயே உடல் பயிற்சி செய்யும் போது இவர் உயிரிழந்தது தற்போது வரை அவருடைய ரசிகர்கள் பலரால் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது.

413

இவரை தொடர்ந்து சமீபத்தில் இந்தி திரையுலகின் நகைச்சுவை நடிகர்  ராஜு ஸ்ரீவஸ்தவாவும் ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும்போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நான் ஒன்னும் மேஞ்சிவிட்ட மாடு கிடையாது... ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய ஏடிகே..!
 

513

இப்படி அடுத்தடுத்து பிரபலங்களுக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படுவதால், ​​ஒருவரின் இதயத்தை எவ்வாறு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், உடல் பயிற்சியின் போது செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

613

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

புகைபிடிப்பது உங்களுடைய உடல் நலனை பாதிக்கும் எனவே புகைபிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Breaking: இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!
 

713

ஆரோக்கியமான இதயத்திற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உங்கள் வொர்க் அவுட்டை மிகைப்படுத்தாதீர்கள். தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றாலும், அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம்.

813

குறைந்தது ஆறு மணிநேரம் எந்த வித தொந்தரவும் இன்றி தூங்குங்கள். 10 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் உணவில் அதிக உப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்ந்து கொள்வதை தவிர்க்கவும், இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்க கூடும்.

அதிர்ச்சி..! ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்!

913

 

சரியான முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி? 

மருத்துவர்களின் கருத்தின் படி, ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். 
 

 

1013

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:

டிரெட்மில்லில் முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும், படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி உங்களின் வேகத்தை ஏற்றி இரக்கம் செய்வது அவசியம், அதே போல் செங்குத்தாக டிரெட்மில்லில் ஓடுவதை மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரை செய்வது இல்லை. எனவே டிரெட்மில் சாய்வு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

23 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் படத்தில் இணைந்த பிரபலம்! அதிகார பூர்வ தகவல் வெளியானது!

1113

எடைப் பயிற்சி செய்யும் போது...  நீங்கள் ஒரு தொடக்கப் பயிற்சியாளராக இருந்தால், உங்கள் பயிற்சியை எப்போதும் எளிமையான எடையுடன் தொடங்குங்கள். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கவும். உங்களால் முடியாத ஒரு எடையை எப்போதும் தூக்கி பார்க்க நினைக்காதீர்கள்... இது மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை கூட ஏற்படுத்தலாம்.
 

1213
kiwi

kiwi

உடற்பயிற்சி செய்யும் போது, உங்களின் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு சிறந்த இதய துடிப்பு நிமிடத்திற்கு 140/150 க்கு மேல் இருக்கக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

1313

உடல் பயிற்சியின் போது, கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் ஒன்று வியர்வை. வியர்வை ஏற்படுவது இயற்கையானது என்றாலும், மார்பில் கனம், தாடை அல்லது இடது கையில் வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. இது போன்ற சில விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு உடல் பயிற்சி மேல்கொள்வது நல்லது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved