Breaking: இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!
இளையராஜா இசையுலகிற்கு ஆற்றிய பணியை பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டியில் அமைந்துள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில், நடைபெறும் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழகம் வந்த பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று, அவருக்கு நினைவு பரிசாக சோழர்களின் வரலாற்று நூலாக புனையப்பட்ட நாவலான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் ஐந்து பாகங்களை வழங்கினார்.
அதிர்ச்சி..! ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்!
பின்னர் காந்தி தொப்பி அணிந்தபடி மேடைக்கு வந்த பிரதமர். 2018 - 2019 ஆண்டுகள் மற்றும் 2019 - 2020 கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து பிரதமர் இசைஞானி இளையராஜா, திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, சாதனை படைத்து... தொடர்ந்து தன்னுடைய இசை பணியை ஆற்றிய வரும் இளைய ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
'பாரதி கண்ணம்மா' முடிவுக்கு வருவது எப்போது? இயக்குனருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகர்கள்!
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்போம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.