அதிர்ச்சி..! ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்!
46 வயதான பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் உடல்பயிற்சி கூடத்தில், ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, உடல்பயிற்சி போன்றவை முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தாலும், அளவுக்கு மீறி உடல் பயிற்சி செய்வதால் சமீப காலமாக மாரடைப்பு ஏற்படுவதும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், கூடி கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு பிரபல கன்னட சூப்பர் ஸ்டார், புனீத் ராஜ்குமாருக்கு உடல்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
23 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் படத்தில் இணைந்த பிரபலம்! அதிகார பூர்வ தகவல் வெளியானது!
இதே போல் பிரபல காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ், ஜிம்மில் உடல்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை மேற்கொண்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து தற்போது பிரபல டிவி நடிகர் உடல் பயிற்சி செய்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி நடிகரான சித்தாந்த் சூர்யவன்ஷி இன்று காலை (வெள்ளிக்கிழமை) ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக அவரது நண்பரும், தொலைக்காட்சி நடிகருமான ஜெய் பானுஷாலி தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் உறுதி படுத்தியுள்ளார். மேலும் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு, இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!
'பாரதி கண்ணம்மா' முடிவுக்கு வருவது எப்போது? இயக்குனருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகர்கள்!
46 வயதே ஆகும் சித்தாந்த், குசும், வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ன், போன்ற தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவருடைய மனைவி ஒரு சூப்பர் மாடல் ஆவார். இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த இவர், 46 வயதில்... உயிரிழந்த சம்பவம் பாலிவுட் சீரியல் வாட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் பலர் இவருக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.