நான் ஒன்னும் மேஞ்சிவிட்ட மாடு கிடையாது... ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய ஏடிகே..!

பிக்பாஸ் வீட்டில் ஏடிகே பேசியபோது ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரி வாங்கி கட்டிக்கொண்ட புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

ADK and VJ Maheshwari fight in 3rd promo

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார டாஸ்க் சுவாரஸ்யம் இல்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க் பிரச்சனைகளுக்கு குறைவில்லாமல் நடந்து வருகிறது போக்கிரி டாஸ்க். இந்த வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்றும் 'அட தேனடை' என்றும் இரண்டு அணியாக பிரிந்து விளையாடி வருகிறார்கள்.

ADK and VJ Maheshwari fight in 3rd promo

Breaking: இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!

பேக்கிரியில் வைக்கப்படும் பொருட்கள் பிக்பாஸ் தரப்பிடம் இருந்து கொடுக்கப்படும். அதனை இரண்டு அணிகளை சேர்ந்தவர்களும் கைப்பற்றவேண்டும். எனவே போட்டியாளர்கள் பொருளை எடுப்பதில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இன்றைய முதல் புரோமோவிலேயே பிக்பாஸ் கொடுத்த பொருளை எடுத்த போது... மணிகண்டன் தன்னை அடித்து விட்டதாக அமுதவாணம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினேன்.

ADK and VJ Maheshwari fight in 3rd promo

இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் இந்த வாரம் டாஸ்கில் அதிகம் பங்களிப்பை கொடுக்காத போட்டியாளர்கள் குறித்து கூறவும் என சொன்னதற்கு... விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஜனனியின் பெயரை கூறியதால், ஜனனி அவர்கள் சொன்னதை ஏற்க மறுத்து கத்தி கூச்சல் போட்டார். இதை தொடர்ந்து வெளியாகியுள்ள 3 ஆவது புரோமோவில் ADK-விடம்  வாங்கி கட்டி கொண்டுள்ளார் மகேஸ்வரி.

ADK and VJ Maheshwari fight in 3rd promo

அதிர்ச்சி..! ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்!

ஏடிகே ஏதோ பேசிவிட்டு கோபித்து கொள்ள வேண்டாம் என ஜனனியிடம் கூறுகிறார். இதற்க்கு ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரியை பார்த்து நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள், அப்படி செய்வது இரிடேட்  ஆவதாக அவர் கூற அதற்க்கு மகேஸ்வரி என்னுடைய இஷ்டம் என ஏடிகே விடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது நீங்கள் என்ன சொன்னாலும் வாங்கிட்டு போக நான் ஒன்னும் மேஞ்சிவிட்ட மாடு கிடையாது என ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார் ஏடிகே. இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios